தேர்தல் முடிவு வந்தவுடன் மத்தியில் மோடி ஆட்சியும் மாநிலத்தில் எடப்பாடி ஆட்சியும் முடிவுக்கு வரும் : மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து தனக்கன்குளம் நேதாஜி நகரில் தேர்தல் பிரச்சாரம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து தனக்கன்குளம் நேதாஜி நகரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், சுய நினைவு அற்ற நிலையில் இருந்த ஜெயலலிதாவிடம் கையெழுத்து வாங்கப்பட்டதுதான், அதிமுகவின் வெற்றி செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளிக்கக் காரணம் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், இதன் மூலம், அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் ஜெயலலிதாவையும் ஏமாற்றி உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தேர்தல் முடிவு வந்தவுடன் மத்தியில் மோடி ஆட்சியும் மாநிலத்தில் எடப்பாடி ஆட்சியும் அகற்றப்படும் என்று தெரிவித்துள்ளார்.