உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாது- தமிழக அரசு

Local elections can not be held - Tamilnadu govt

உள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த முடியாத சூழல் உள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான  வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.அதில் மக்களவை தேர்தல் நடைபெறுவதால் வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையத்தில் பெறமுடியவில்லை. வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டியுள்ளதால் உள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த முடியாத சூழ்நிலை உள்ளது என்று தகவல் தெரிவித்துள்ளது.