தமிழகம், புதுச்சேரியில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் இந்திய பெருங்கடல் – வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு […]
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு பகுதியில், கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. மேலும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரை கிராமங்களான நீரோடி, சின்னத்துரை, வள்ளவிளை அழிக்கல் போன்ற பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுவதுடன், மார்த்தாண்டம், கடியபட்டினம் போன்ற பகுதிகளில் வீடுகளுக்குள் கடல் […]
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே, ஏழை குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகள், தவறான உறவில் பிறக்கும் குழந்தைகளை வாங்கி, குழந்தைகள் இல்லாத தம்பதியினருக்கு விற்கும் அவலம் இப்பகுதியில் நடந்து வருகிறது. குழந்தையின் பாலினம், எடை, நிறம் ஆகியவற்றின் அடிப்படையில், 3 முதல் 4 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்று வருவதாக தெரிவித்துள்ளனர். இந்த குழந்தை விற்பனையின் பின்னணியில், ஒய்வு பெற்ற செவிலியர் ஒருவர் இடைத்தரகராக செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது. மேலும், நாமக்கல் நகராட்சியில், விற்பனை செய்யப்படும் […]
ஏற்காடு வாழவந்தியை சேர்ந்தவர் துரைசாமி. இந்த இளைஞர் கடந்த 2014-ம் ஆண்டு, 14 வயதுடைய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து இவரது பெயரில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து சேலம் மாவட்ட மகளீர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 5 வருட சிறை தண்டனை மட்டுமல்லாமல், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
திமுக கட்சியை சேர்ந்த பில்லா ஜெகன், தனது தம்பியை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார். இந்நிலையில், திமுகவின் பொது செயலாளர் அன்பழகன் தூத்துக்குடியை சேர்ந்த பில்லா ஜெகனை திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி இவர் நடந்துள்ளதாகவும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலினை, நாஞ்சில் சம்பத் சந்தித்துப் பேசினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெறும் மாநாட்டில் தமிழ்ச் சங்கம் சார்பில் கலந்துகொள்ள இருக்கிறேன். அதற்காக ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றதாகத் தெரிவித்துள்ளார். மேலும்,ம.தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய கட்சிகளுக்குத் திரும்பச் செல்லும் எண்ணம் இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த நாஞ்சில் சம்பத், ” அப்படி ஒரு கனவு கண்டால்கூட […]
தனியார் தொலைக்காட்சிகள் நடத்திய காமெடி ஷோவில் கலந்து கொண்டு தனது, நகைச்சுவையான பேச்சால் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் இமான் அண்ணாச்சி. இந்நிலையில், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இவரது வீட்டில் உள்ள 41 சவரன் நகையும், 10 ஆயிரம் மதிப்புள்ள வாட்சும் . இதுகுறித்து, இவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய இமான் அண்ணாச்சி, ஒவ்வொரு மேடையா ஏறி இறங்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க சார். அதான் கஷ்டமா இருக்குது. நிச்சயமா என் நகைங்க திரும்ப […]
நான் அரசியலில் இருப்பது தான் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு பிடிக்கவில்லை என்றால், நான் அரசியலை விட்டு விலக தயார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், எனக்கு தேவை உழைக்கும் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும், அவர்களுக்காக என் அரசியல் வாழ்க்கையை விட தயார் என்று தெரிவித்துள்ளார்.
மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி.இவருக்கு சொந்தமான ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் அமலாக்க துறையால் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தயாநிதி மதுரை கீழவளவில் உள்ள கிரானைட் சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில், சென்னை மற்றும் மதுரையில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் அனைத்து அமலாக்கத் துறையால் முடக்கப்பட்டுள்ளது.
நான் அரசியலை விட்டு விலக தயார் என்று விசிக தலைவர் திருமாவளவன் என்று தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் வாக்குபதிவின் பொது, இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மோதல் தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அதில் அவர் பேசுகையில்,நான் அரசியலில் இருப்பது தான் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு பிடிக்கவில்லை என்றால் நான் அரசியலை விட்டு விலக தயார் .ஆர்.எஸ்.எஸ். உடன் கூட்டணி சேர்ந்து […]
தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்பதால், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இலங்கை கடற்கரை பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், 28ம் தேதிக்குள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றவர்கள் திரும்பி வரவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
4 சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில் அமமுகவுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு செய்து தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தொகுதி தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் பரிசுப்பெட்டி சின்னத்தை ஒதுக்கியது. அதேபோல் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை கட்சியாக பதிவு செய்தார் தினகரன். நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த நான்கு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 22ம் தேதி தொடங்கும் […]
அடுத்த 24 மணி நேரத்தில் உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,மீனவர்கள் ஏப்ரல் 26-ம் தேதி முதல் கடலுக்கு செல்ல வேண்டாம்.தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்.அதேபோல் 26-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகும். 27, 28 ஆகிய தேதிகளில் புயலாக உருமாறும் .அடுத்த 24 மணி […]
டிக்-டாக் செயலி அதிகமாக இந்தியாவில் உள்ள இளைஞர்கள், பெண்கள் மட்டுமின்றி குழந்தைகளும் இந்த செயலியை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் டிக்-டாக் செயலியை பயன்படுத்திய 400 க்கும் மேல் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். டிக்-டாக் செயலியை தடை விதிக்க கோரி மதுரை சேர்ந்த வழக்கறிஞர் எஸ். முத்துக் குமார் அவர்கள் மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த உயர் நீதிமன்றம் டிக்-டாக் செயலியை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். மேலும் […]
தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலின் போது, வாக்களிக்க வந்த நடிகர் சிவகார்த்திகேயனின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் குழப்பம் ஏற்பட்டது. அதன் பின் அவர் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். இந்நிலையில், தலைமை தேர்தல் அதிகாரி, சிவகார்த்திகேயனின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாத போது, அவர் வாக்களித்தது குறித்து பேசிய போது, ” விதிமீறி வாக்களித்திருந்தாலும், நடிகர் சிவகார்த்திக்கேயன் வாக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்றும், […]
ஓபிஎஸ் – ஈபிஎஸ்க்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரட்டை இலைச் சின்னத்திற்கு ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் தரப்பும் சசிகலா தரப்பும் போட்டிபோட்டது. இதைத்தொடர்ந்து இரட்டை இலைச் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இரட்டை இலைச்சின்னத்துக்கு உரிமை கோரி சசிகலா தரப்பும் ஓபிஎஸ் தரப்பு மாறி மாறி பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தன. இந்நிலையில் தேர்தல் ஆணையம் இரட்டை இலைச்சின்னத்தை ஓபிஎஸ் தரப்புக்கு ஒதுக்கியது. […]
4 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது . நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த 4 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 22ம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது.அதேபோல் அடுத்த மாதம் 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் திருப்பரங்குன்றம், சூலூர் உள்ளிட்ட 4 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது . திருப்பரங்குன்றம் – ரா.ரேவதி ஒட்டப்பிடாரம் – மு. அகல்யா சூலூர் – வெ.விஜயராகவன் […]
இன்று அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி வேட்புமனு தாக்கல் செய்தார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் செந்தில்பாலாஜி, அக்கழகத்தின் அமைப்பு செயலாளராக பதவி வகித்தார்.பின்னர் திமுகவில் இணைந்தார்.இதன் பின் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக செந்தில் பாலாஜி நியமனம் செய்யப்பட்டார். அதேபோல் தமிழகத்தில் 18 தொகுதிகளுடன் சேர்த்து மீதமுள்ள நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த 4 தொகுதிகளில் மே 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனால் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக […]
இலங்கையின் தலைநகரான கொழும்பில் மக்கள் அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில், தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் குண்டுகள் வெடித்தது. இதில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், பலரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். வரும் 26-ம் தேதி சீமான் தலைமையில் இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தை கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. சென்னை வள்ளுவர்கோட்டத்தில் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.