நான் அரசியலை விட்டு விலக தயார் என்று விசிக தலைவர் திருமாவளவன் என்று தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் வாக்குபதிவின் பொது, இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மோதல் தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அதில் அவர் பேசுகையில்,நான் அரசியலில் இருப்பது தான் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு பிடிக்கவில்லை என்றால் நான் அரசியலை விட்டு விலக தயார் .ஆர்.எஸ்.எஸ். உடன் கூட்டணி சேர்ந்து கூத்தடிக்கிறார் ராமதாஸ். சொந்த சமூகத்தையே காட்டிக்கொடுப்பவர் ராமதாஸ்.
எனக்கு தேவை உழைக்கும் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும், அவர்களுக்காக என் அரசியல் வாழ்க்கையை விட தயார் என்று கூறினார்.