அரசியல்

இன்று மகாராஷ்டிரா சபாநாயகர் தேர்தல்;நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு!

மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் முன்னதாக போர்க்கொடி தூக்கினர்.இதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவையும் வாபஸ் பெறுவதாக அதிருப்தி எம்எல்ஏக்கள் அறிவித்தனர். இதனால்,மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டார்.இதனைத்தொடர்ந்து,ஆளுநர் உத்தரவிட்டதற்கு எதிராக சிவசேனா தலைமைக் கொறடா சுனில் பிரபு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். […]

#EknathShinde 6 Min Read
Default Image

அதிமுக சட்டவிதிகளின்படி இன்றுவரை நான் தான் ஒருங்கிணைப்பாளர்..! – ஓபிஎஸ் அதிரடி

அதிமுக சட்டவிதிகளின்படி இன்றுவரை நான் தான் ஒருங்கிணைப்பாளர் என்று ஓபிஎஸ் பேட்டி.  சென்னை வந்த திரெளபதி முர்மு-க்கு எடப்பாடி பழனிசாமி சால்வை அணிவித்து வரவேற்றார். திரெளபதி முர்முவை தனித் தனியாக சந்தித்து அதிமுக சார்பில் ஆதரவு அளித்துள்ளார். பாஜக சார்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரௌபதி முர்முவுக்கு அதிமுக முழு ஆதரவைத்தருவதாக  தெரிவித்துள்ளார். விழா மேடையில் ஈபிஎஸ் அமர்ந்திருந்த நிலையில், ஓபிஎஸ் மேடைக்கு வரவில்லை. இதனையடுத்து, எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது […]

#OPS 3 Min Read
Default Image

விழா மேடையில் ஈபிஎஸ் அமர்ந்துள்ள நிலையில், மேடைக்கு வராத ஓபிஎஸ்..!

நிகழ்ச்சி நடைபெறும் ஓட்டலில் தனி அறையில் உள்ள ஓபிஎஸ் மேடைக்கு வரவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு கூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோர சென்னைக்கு வருகை தந்துள்ளார். அதிமுக, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரௌபதி முர்மு ஆதரவு கோருகிறார். முர்முவை சந்திக்க அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் தனித்தனி அறைகளில் காத்திருந்தனர். இந்த நிலையில், சென்னை வந்த திரெளபதி முர்மு-க்கு எடப்பாடி […]

#OPS 3 Min Read
Default Image

எடப்பாடி பழனிசாமியிடம் ஆதரவு கோரினார் திரௌபதி முர்மு..!

திரௌபதி முர்மு எடப்பாடி பழனிசாமியிடம் ஆதரவு கோரினார்.  தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு கூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோர சென்னைக்கு வருகை தந்துள்ளார். அதிமுக, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரௌபதி முர்மு ஆதரவு கோருகிறார். முர்முவை சந்திக்க அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் தனித்தனி அறைகளில் காத்திருந்தனர். இந்த நிலையில், சென்னை வந்த திரெளபதி முர்மு-க்கு எடப்பாடி பழனிசாமி சால்வை அணிவித்து […]

#EPS 2 Min Read
Default Image

TET தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் – அவகாசம் நீட்டிப்பு..!

TET தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள வரும் 11 முதல் 16-ம் தேதி வரை அவகாசத்தை நீட்டிப்பு. TET தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள வரும் 11 முதல் 16-ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘சென்னை – 06 தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் / மற்றும் தாள் I (TNTET Paper I and Paper !!) 2022ஆம் ஆண்டிற்கான […]

#TET 4 Min Read
Default Image

குடியரசு தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு சென்னை வருகை..! ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்தனி அறைகளில் காத்திருப்பு..!

முர்முவை சந்திக்க அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் தனித்தனி அறைகளில் காத்திருக்கின்றனர். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு கூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோர சென்னைக்கு வருகை தந்துள்ளார். அதிமுக, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரௌபதி முர்மு ஆதரவு கோருகிறார். முர்முவை சந்திக்க அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் தனித்தனி அறைகளில் காத்திருக்கின்றனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக எம்.எல்.ஏக்கள், […]

#ADMK 2 Min Read
Default Image

கலைஞர் என்னுள் இருந்து என்னை இயக்கிக் கொண்டிருக்கிறார் – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் இருந்தால் என்ன நினைப்பர், செயல்படுத்துவார் என்று சிந்தித்து செயல்பட்டு கொண்டிருக்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.  ரூரில் இன்று, திருமாநிலையூரில் ரூ.581 கோடி மதிப்பிலான 99 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார். ரூ.28 கோடியில் முடிவுற்ற 95 திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். மேலும், இந்த நிகழ்வில், 80,750 பயனாளிகளுக்கு ரூ.500.03 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை  வழங்கினார். இந்த நிகழ்வில் பேசிய முதல்வர், ஓராண்டாக ஓய்வின்றி உழைத்து வருகிறோம். இந்த ஓராண்டு ஆட்சி […]

#DMK 4 Min Read
Default Image

ஓபிஎஸ் ஐயா இன்றி ஓர் அணுவும் அசையாது..! – சேலத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர்

அதிமுகவில், ஓபிஎஸ் ஐயா இன்றி ஓர் அணுவும் அசையாது என போஸ்டர் ஒட்டிய அதிமுக தொண்டர்கள்.  கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் என தனி தனியாக பிரிந்து ஆலோசனை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன் பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில், அதிமுக பொதுக்குழு கூட்டம் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில், வரும் 11-ஆம் தேதி பொதுக்குழு நடைபெற […]

#ADMK 3 Min Read
Default Image

கரூரில் 99 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

கரூரில் இன்று, திருமாநிலையூரில் ரூ.581 கோடி மதிப்பிலான 99 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பதவியேற்றது முதல், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று, முடிந்த நலத்திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். இந்த நிலையில், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக கரூர் மற்றும் நாமக்கல்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில், கரூரில் இன்று, திருமாநிலையூரில் […]

#DMK 2 Min Read
Default Image

குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரிக்க வருமாறு தமிழ்நாடு பாஜக சார்பில் அறிக்கை

தமிழ்நாட்டிற்கு ஆதரவு கேட்க வரும் குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரிக்க வருமாறு தமிழ்நாடு பாஜக சார்பில் அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு கூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோர இன்று சென்னை வருகிறார். தமிழ்நாட்டிற்கு ஆதரவு கேட்க வரும் குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரிக்க வருமாறு தமிழ்நாடு பாஜக சார்பில் அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் என்று பொதுவாக சொல்லி எடப்படி பழனிசாமி பெயரை […]

#BJP 2 Min Read
Default Image

ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனா கட்சியில் இருந்து நீக்கம்..! உத்தவ் தாக்கரே அதிரடி..!

உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனா கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார். உத்தவ் தாக்கரேவின் ராஜினாமாவை தொடர்ந்து,  உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அதிருப்தி சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டேவை பாஜக முதலமைச்சராக அறிவித்தது. அதன்படி ,நேற்று முன்தினம் மராட்டியத்தில் சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பாஜக ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளார். மேலும், துணை முதல்வராக பாஜக-வின் தேவேந்திரபட்னாவிஸ் பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில், உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனா கட்சியில் […]

Eknath Shinde 2 Min Read
Default Image

ஜூலை 4ம் தேதி சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வலியுறுத்தலின் பெயரில் ஜூலை 4-ஆம் தேதி சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர் கடந்த ஒரு ஆண்டில் 2.26 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 132 நிறுவனங்களுடன் செய்த ஒப்பந்தத்தால் மேலும் 90 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். 38 நிறுவனங்களுடன் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கோவை மற்றும் […]

#MKStalin 3 Min Read
Default Image

தமிழகத்தில் உள்ள அணைகளை பாதுகாக்க மாநில அணை பாதுகாப்பு அமைப்பு – தமிழக அரசு

தமிழகத்தில் உள்ள அணைகளை பாதுகாக்க மாநில அணை பாதுகாப்பு அமைப்பை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள அணைகளை பாதுகாக்க மாநில அணை பாதுகாப்பு அமைப்பை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. மத்திய அரசின் அணை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மாநில அணை பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மண்டலங்களின் தலைமைப் பொறியாளர்கள் உட்பட 15 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மைப்பு, அணையின் பாதுகாப்பு, நீர் வருகை, நீர் […]

#Tamilnadugovt 2 Min Read
Default Image

அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத்துறையில் ₹750 கோடி மோசடி..! விசாரணைக்குபின் சொத்துக்கள் பறிமுதல்..! – ஐ.பெரியசாமி

டந்த அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத்துறையில் நடந்த ரூ.750 கோடி மோசடி தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி.  திண்டுக்கல்லில் கூட்டுறவு துறை சார்பாக கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டார். இந்த நிகழ்வுக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், 10 ஆண்டு கால  அதிமுக ஆட்சியில் 5 கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், திமுகவின் ஒருவருட ஆட்சியில் 33 கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. […]

#DMK 3 Min Read
Default Image

உட்கட்சி விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் தலையீடு ஏற்றுக் கொள்ள முடியாது – ஈபிஎஸ் தரப்பு

முதன்மை மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களின் நம்பிக்கையை ஓ.பி.எஸ். இழந்துவிட்டார் என ஈபிஎஸ் மேல்முறையீட்டு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, கடந்த 23-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், அந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும், ஈபிஎஸ் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், அதிமுக பொதுக்குழு உட்கட்சி செயல்பாடு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் தலையிட்டு இருப்பது சட்டத்திற்கும், […]

#ADMK 4 Min Read
Default Image

உச்சநீதிமன்றத்தின் இந்த செயல் நீதித்துறையின் மீதான நம்பிக்கையைத் துளிர்விடச் செய்கிறது – திருமாவளவன்

நூபுர்சர்மாவின் இழிசெயலை உச்சநீதிமன்றம் கண்டித்திருப்பது நீதித்துறையின் மீதான நம்பிக்கையைத் துளிர்விடச் செய்கிறது என திருமாவளவன் ட்வீட்.  நுபுர் சர்மா தன் மீதான வழக்குகளை டெல்லிக்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், சர்மாவின் பேச்சுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.   இது குறித்து, நீதிபதிகள் கூறுகையில், நுபுர் சர்மா மற்றும் அவரது வார்த்தைகள் ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கி உள்ளது. உதய்பூரில் நடந்த படுகொலைக்கு நுபுர் […]

#Thirumavalavan 6 Min Read
Default Image

உலகில் 110 நாடுகளுக்கு மேலாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

உலகில் 110 நாடுகளுக்கு மேலாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் பேட்டி.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.  இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொற்று பாதிப்பு குறித்தும் அதை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று உயர் அதிகாரியுடன் ஆலோசனை மேற்கொண்டார். […]

#Corona 3 Min Read
Default Image

நாட்டு மக்கள் அனைவரிடமும் நுபுர் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி

நுபுர் சர்மா நாட்டு மக்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.  சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா,இஸ்லாமிய இறைத் தூதர் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் சில சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாக புகார் எழுந்தது.இது சர்வதேச அளவில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையான நிலையில்,இஸ்லாமிய நாடுகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கண்ணையா லால் என்பவர் […]

court 6 Min Read
Default Image

அதிமுகவில் தொடரும் மாற்றங்கள்..! ட்விட்டரில் தனது பொறுப்பை மாற்றினார் ஈபிஎஸ்..!

ஈபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கட்சிப் பொறுப்பை அதிமுக தலைமை நிலையச் செயலாளர் என்று மாற்றியுள்ளார். கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் என தனி தனியாக பிரிந்து ஆலோசனை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன் பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில், அதிமுக பொதுக்குழு கூட்டம் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில், வரும் 11-ஆம் தேதி பொதுக்குழு […]

#ADMK 3 Min Read
Default Image

தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்பு..! தங்கம் மீதான இறக்குமதி வரி உயர்வு…!

தங்கத்தின் மீதான அடிப்படை இறக்குமதி வரியை 7.5  சதவீதத்திலிருந்து 12.5% ஆக உயர்வு. மத்திய அரசு தங்கத்தின் மீதான அடிப்படை இறக்குமதி வரியை 7.5  சதவீதத்திலிருந்து 12.5% ஆக உயர்த்தி உள்ளது. தங்கத்தின் இறக்குமதியை குறைத்து அந்நிய செலவாணி வெளியேறுவதை தடுக்கும் நோக்கில் தங்கம் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தங்கம் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளதால், தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Gold 2 Min Read
Default Image