தமிழ்நாடு தினம் குறித்த முன்னேற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர் இறையன்பு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு தினமாக அனுசரிக்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிலையில் வரும் ஜூலை 18 ஆம் தேதி தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனை அடுத்து தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்கள் ஜூலை 18-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள தமிழ்நாடு தினம் குறித்த முன்னேற்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு […]
குஜராத் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தனது முன்னாள் ஆசிரியரையும் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் குஜராத்தில் ரூ.3500 கோடி மதிப்பிலான நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், கடந்த 20 ஆண்டுகளாக குஜராத் அடைந்துவரும் வளர்ச்சி மாநிலத்தின் பெருமையாக காணப்படுகிறது என தெரிவித்தார். இந்த நிலையில், குஜராத் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தனது முன்னாள் ஆசிரியரையும் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் விற்கப்படும் மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் ஏன் அமல்படுத்தக் கூடாது? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மலைப் பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் வனப் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளில் கண்ணாடி பாட்டில்களில் விற்கப்படும் மது பானங்களை பயன்படுத்திய பின்னர் காலி மது பாட்டில்களை வனப்பகுதிகளில் வீசிச் செல்வதால், அவற்றை விலங்குகள் மிதிக்கும்போது காயமடைவதாகவும், அடுத்த மூன்று மாதங்களில் அவை இறந்து விடுவதாக நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் […]
3-ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு. தமிழகத்தில் மாணவர்களுக்கு வரும் 12-ஆம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனையடுத்து, கோடை விடுமுறை முடிந்து 13-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இதனையடுத்து, 13-ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு, அன்றைய தினமே எண்ணும் எழுத்தும் திட்டத்தையும் துவக்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் குறித்து அரசுக்கு பரிந்துரைக்க வல்லுனர் குழு அமைக்கப்பட்டிருப்பதற்கு வரவேற்பு தெரிவித்துடாக்.ராமதாஸ் ட்வீட். தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் குறித்து அரசுக்கு பரிந்துரைக்க வல்லுனர் குழு அமைக்கப்பட்டிருப்பதும், அக்குழுவின் அறிக்கையை இரு வாரங்களில் பெற்று அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பதற்கு டாக்.ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் குறித்து அரசுக்கு […]
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்கும்,மதுரை ஆதீனத்திற்கும் இடையே கடுமையான மோதல் போக்கு உள்ள நிலையில்,”சர்ச் மற்றும் மசூதியின் சொத்தில் அரசு தலையிடவில்லை. ஆனால்,திருக்கோயில் சொத்துக்களில் மட்டும் தலையிடுகின்றனர். இதனால்,அறநிலையத்துறை கொள்ளையடிக்கும் கூடாரமாக திருக்கோயில் மாறி வருகிறது.எனவே,அறநிலையத்துறை எனக் கூறப்படும் அறமில்லாத துறையை கலைத்துவிட்டு ஒரு நீதிபதி, வழக்கறிஞரை போட வேண்டும்.மேலும்,இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக பணம்,பொருள்கள் போடக்கூடாது.” எனக் கடுமையாகச் சாடியிருந்தார். இதற்கு பதில் அளித்து பேசிய இந்து […]
அண்ணாமலை அவரே முதலாளி போல பேசி வருகிறார். அவர் டெல்லிக்கு காவடித் தூக்கும் ஒரு அடிமை சீமான் பேட்டி. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அண்ணாமலை அவரே முதலாளி போல பேசி வருகிறார். அவர் டெல்லிக்கு காவடித் தூக்கும் ஒரு அடிமை. ஈழத்தை பெற்றுக் கொடுப்பேன் என அமித் ஷா, நரேந்திர மோடி என்னிடம் கூற வேண்டும். 8 ஆண்டுகளாக ஈழத்தை பற்றி பேசாத […]
சிதம்பரம் நடராஜர் கோயில், தீட்சிதர்களின் தனிப்பட்ட சொத்து அல்ல என கே.பாலகிருஷ்ணன் அறிக்கை. சிதம்பரம் நடராஜர் கோயில், தீட்சிதர்களின் தனிப்பட்ட சொத்து அல்ல. அது மக்களின் சொத்தே ஆகும். அங்கு நிர்வாகம் ஒழுங்காக நடக்கிறதா என்று ஆய்வு செய்வதற்கான உரிமை அரசுக்கு உண்டு என சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலின் கணக்கு வழக்குகளை ஆய்வு செய்வதற்காக சென்ற அறநிலையத்துறை உயர் அதிகாரிகளை தீட்சிதர்கள் தடுத்து […]
உணவளிப்பதை வெறும் வணிகமாகப் பார்க்காமல் அறம் என உணர்ந்து, தரமான உணவை வழங்க வேண்டும் என முதல்வர் ட்வீட். இன்று உலக பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘மனிதரின் அடிப்படைத் தேவைகளுள் தலையாயது உணவு! மக்களுக்குப் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதிசெய்ய அன்றாடம் நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம். உணவளிப்பதை வெறும் வணிகமாகப் பார்க்காமல் அறம் என உணர்ந்து, தரமான உணவை […]
நீர்ப்பிடிப்பு பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ள நிலங்களை பயன்பாட்டு மாற்றம் செய்யும் அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என ஈபிஎஸ் வலியுறுத்தல். நீர்ப்பிடிப்பு பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ள நிலங்களை பயன்பாட்டு மாற்றம் செய்யும் அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என ஈபிஎஸ் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், பத்து ஆண்டுகால வனவாசத்திற்குப் பிறகு ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ள இந்த விடியா ஆட்சியாளர்கள், காய்ந்த மாடு கம்பம் கொல்லையில் பாய்ந்தது போல, தமிழகத்தை பிரித்து மேயத் தொடங்கி இருக்கிறார்கள். […]
ஊரின் பெயரை மாற்றுவது, பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றுவது போன்றவை அரசின் கொள்கை முடிவு சார்ந்தது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. மதுரை உயர்நீதிமன்ற கிளையில், திருச்சி பொன்னம்பட்டி பேருந்து நிலையத்தின் பெயரான காமராஜர் பேருந்து நிலையம் என்ற பெயரை மாற்ற கூடாது என வழக்கு தொடரப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தின் பெயரை மாற்ற பேரூராட்சி நிராவகம் முடி செய்துள்ள நிலையில், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வலக்கை விசாரித்த நீதிபதிகள் பி.எம்.பிரகாஷ் மற்றும் […]
அங்கன்வாடி மையங்களிலேயே எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் செயல்படும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 2381 அங்கன்வாடிகளை அரசு பள்ளிகளுடன் இணைத்து தொடங்கப்பட்ட எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் கூறுகையில், அங்கன்வாடி மையங்களிலேயே எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் செயல்படும். அர்ப்பள்ளிகளில் செயல்பட்டு வந்த எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் அங்கன்வாடி மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே தங்கள் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைங்களை […]
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் போராடிய செவிலியர்களை சமூக விரோதிகளைப் போல காவல் துறையினர் கையாண்ட விதம் கடும் கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் ட்வீட். பணி நிரந்திர உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரசு மருத்துவமனை செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவலறிந்து வந்த காவல்துறை போராட்டம் நடத்தும் செவிலியர்களுடன் பேசுவார்த்தையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஆனால், […]
தமிழ்நாட்டில் 2381 அங்கன்வாடிகளை அரசு பள்ளிகளுடன் இணைத்து தொடங்கப்பட்ட எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் ட்வீட். தமிழ்நாட்டில் 2381 அங்கன்வாடிகளை அரசு பள்ளிகளுடன் இணைத்து தொடங்கப்பட்ட எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்து பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாட்டில் 2381 அங்கன்வாடிகளை அரசு பள்ளிகளுடன் […]
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா,இஸ்லாமிய இறைத் தூதர் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் சில சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாக புகார் எழுந்தது.இது சர்வதேச அளவில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையான நிலையில்,இஸ்லாமிய நாடுகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. இதனைத்தொடர்ந்து,நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால்,பாஜகவின் செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.இதனைத் தொடர்ந்து,நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக பேசும் வகையில் ட்விட் செய்ததாக பாஜகவின் […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோயிலான சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்கள் நிர்வகித்து வரும் நிலையில்,சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இதனால்,சிதம்பரம் நடராஜர் கோயிலில் வரவு செலவு கணக்கு உள்ளிட்ட முக்கிய விவரங்களை ஆய்வு செய்வதற்காக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஆனால்,இதற்கு தீட்சிதர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதனையடுத்து,இன்று சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வு நடத்தப்பட இருந்த நிலையில்,தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அதன்பின்னர்,சட்டப்படி உறுதியாக ஆய்வு […]
தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மீனவ பகுதிகளை சேர்ந்த இளைஞர்களுக்கு கடற்கரை உயிர் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பயிற்சி அளிக்கும் திட்டதை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமைச்செயலகத்தில் இருந்தவாறு காணொளி காட்சி மூலமாக சற்று முன்னர் தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டத்தின் மூலம்,கடலில் மூழ்கி தவிப்பவர்களை மீட்கவும்,கடல் விபத்துகளை குறைக்கவும் 14 கடலோர கிராமங்களை சேர்ந்த 1000 இளைஞர்களுக்கு உயிர்காக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது.இதற்காக ரூ.53 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை […]
தமிழகம் முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் சில முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் ஜூன் 9 ஆம் தேதி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில்,வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரேசன் ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி,”NO Work No Pay” என்பதன் அடிப்படையில் சம்பளத்தை பிடித்தம் செய்ய மண்டல இணைப்பதிவாளர்களுக்கு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும்,வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பதில் மாற்று ஏற்பாடு செய்து ரேசன் கடைகளை திறக்கவும் […]
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தமிழகத்தில் ஆட்சி அமைத்ததில் இருந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்.அந்த வகையில , திமுக அரசின் இரண்டு துறைகளின் ஊழல் ஆதாரங்களை இரு தினங்களில் வெளியிட உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். அமைச்சர் விளக்கம் இந்நிலையில்,கர்ப்பிணிகளுக்கான கிட்டில் இரு பொருட்களை தனியாரிடம் வாங்கியதால் அரசுக்கு ரூ.77 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும்,இது குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் […]
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.குறிப்பாக,மகாராஷ்டிரா,கேரளா,டெல்லி ஆகிய மாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க தீவிர கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை தேவை என மாவட்ட ஆட்சியாளர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார். இதனையடுத்து,தற்போது சென்னை,செங்கல்பட்டு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது எனவும்,இதனால் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் கூறி மாவட்ட நிர்வாகங்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் […]