அதிமுகவை மீட்டெடுப்பது என்றைக்கு நடக்கும் என தெரியாது, ஆனால் மீட்டெடுப்போம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை தி.நகர் வீட்டில் சசிகலாவை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அதிமுகவை மீட்டெடுப்பது என்றைக்கு நடக்கும் என தெரியாது, ஆனால் மீட்டெடுப்போம். அதிமுகவை மீட்டெடுக்கத்தான் அமுமுகவை தொடங்கினோம். பேசுபவர்கள் பேசட்டும் காலம் அவர்களுக்கு பதில் சொல்லும் என கூறியுள்ளார். அமைச்சர் பதிவில் இருப்பவர்கள், ஒரு முதலமைச்சராக இருப்பவர் எப்படி பேச வேண்டும் என்கின்ற ஒரு […]
காலியாக உள்ள 2098 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான இடங்களை நிரப்புவதற்கான போட்டி தேர்வுக்கான தேதி மற்றும் விண்ணப்பிக்கும் தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் 2098 காலியிடங்கள் உள்ள நிலையில், இந்த ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த தேர்வு வருகிற ஜூன் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்காக மார்ச் 1ஆம் தேதியை முதல் மார்ச் 25ஆம் தேதி […]
தீவிர ரஜினி ஆதரவாளரானசென்னை முன்னாள் காங்கிரஸ் துணை மேயர் கராத்தே தியாகராஜன் பாஜகவில் இணைந்தார். சென்னை மயிலாப்பூர் தொகுதியில் காங்கிரஸ் நிர்வாகியாக இருந்து வந்த கராத்தே தியாகராஜன் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக கட்சியில் இருந்து சமீபத்தில் இடைநீக்கம் செய்யப்பட்டார். தீவிர ரஜினி ஆதரவாளரான கராத்தே தியாகராஜன், ரஜினி கட்சி தொடங்குவர் என்று எதிர்பார்க்கப்பட்ட வந்த நிலையில், தனது உடல்நிலை கருதி அரசியலுக்கு வரப்போவதில்லை தெரிவித்திருந்தார். இதையடுத்து, வரும் சட்டமனற்ற தேர்தலை முன்னிட்டு சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை […]
வரும் 15-ம் தேதி முதல் புறநகர் மின்சார ரயில்களில் மாணவர்கள் பயணிக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. வரும் 15-ம் தேதி முதல் புறநகர் மின்சார ரயில்களில், அனைத்து நேரங்களிலும் மாணவர்கள் பயணிக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. ரயில்களில் பயணிக்க மாணவர்களின் அடையாள அட்டை அவசியம் என்றும் தெரிவித்துள்ளது. இதனிடையே, கொரோனா காரணமாக சென்னை புறநகர்களில் ஓடும் மின்சார ரயில்கள் கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதி முதல் நிறுத்தப்பட்டன. பின்னர் ஊரடங்கில் […]
கொரோனா நெருப்பே அணையாத போது விலையேற்றம் என்ற பெட்ரோலையும் ஊற்றுகிறார்கள் என்று முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். பெட்ரோல் விலை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு லிட்டர் 90 ரூபாய் கடந்து விற்கப்படுகிறது. டீசல் ஒரு லிட்டருக்கு 83 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், சதமடிக்கும் பெட்ரோல், டீசல் விலை, மக்களை வதைக்கும் பாஜக, அதிமுக அரசுகள் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பெட்ரோல், டீசல் விலையினை நாளுக்கு […]
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக முதலமைச்சர் பழனிசாமி தமிழகம் முழுவதும் இம்மாத இறுதிக்குள் 2,000 மினி கிளினிக் திறக்கப்படும் என தெரிவித்தார். நேற்று முன்தினம் சிவகங்கை மாவட்டம் கே. வைரவன்பட்டியில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், அறிவிக்கப்பட்ட 2000 மினி கிளினிக்குகள் எங்கே தொடங்கப்பட்டுள்ளன..? மினி கிளினிக்களுக்கு எத்தனை மருத்துவர்கள் செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்..? என கேள்வி எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னம்பிக்கை உள்ளவர்கள் என்னோடு இருங்கள், மற்றவர்கள் எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் தலைமையில் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 500க்கும் மேற்ப்பட்ட உறுப்பினா்கள் பங்கேற்க உள்ளனா். மக்கள் நீதி மய்யம் கட்சி தொடர்பான தேர்தல் கூட்டணி, வேட்பாளர் தேர்வு, தேர்தல் வியூகம் உள்ளிட்ட அனைத்து முடிவையும் எடுக்க […]
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார், எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் கட்சிகள் மும்முரமாக பணியாற்றி வருகின்றன. குறிப்பாக பாஜக தமிழகத்தில் காலூன்றி விட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. எனவே மக்கள் செல்வாக்கு இருக்கும் நபர்களை தங்கள் கட்சியின் பக்கம் கொண்டுவர தீவிரம் காட்டி வருகிறது. நடிகர் விஜயகுமார், நமீதா, கஸ்தூரி ராஜா, பொன்னம்பலம், ராதாரவி உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் பலர் ஏற்கெனவே பாஜகவில் இணைந்திருக்கும் நிலையில், நடிகர் சிவாஜி […]
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சியின் தொடர்ச்சியாக நான்கு இடங்களில் ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி நாளை மறுநாள் தொடங்கவுள்ளது. இந்த ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி மூலம் தொடங்கி வைக்கிறார். கடந்த 2015 முதல் கடந்த ஆண்டு ஆண்டு வரை 6 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளது. இந்த அகழாய்வில் 2,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வாழ்க்கை முறையை அறியும் வகையில், மண்பாண்ட பொருட்கள், மனித மற்றும் […]
விவசாயிகளின் நலனுக்காகவே கூட்டுறவு வங்கியில் பயிர் கடன் ரத்து செய்யப்பட்டது என்று முதல்வர் பழனிசாமி பரப்புரையில் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் காங்கயம் தொகுதியில் தேர்தல் பரப்புரையின்போது மக்கள் மத்தியில் பேசிய முதல்வர் பழனிசாமி, நானும் விவசாயி தான், இப்போதும் விவசாயம் செய்து கொண்டிருக்கிறேன். கொரோனா, புயல், மழை என பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடன் ரத்து செய்யப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்திருந்தேன். விவசாயிகளின் நலனுக்காகவே கூட்டுறவு வங்கியில் பயிர் கடன் […]
இன்று விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், நான் நிதானமாக பேசுகிறேனா..? என தினகரன் கேட்கிறார். ஆமாம் இவர்தான் எனக்கு “ஊத்திக்” கொடுத்தார். அவரோட தொழிலே “ஊத்திக்” கொடுப்பதுதான். ஊத்திக் கொடுத்தே குடியை கெடுத்தவர்கள் அவர்கள். கூவத்தூரில் ஊத்திக் கொடுத்தார் எங்க இல்லை என்று அவரை சொல்லச் சொல்லுங்கள் என காட்டமாக பேசினார். இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் நிதானம் இழந்து, தன்னிலை மறந்து, பதற்றத்தில், […]
இன்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவை ஒருவர் கைப்பற்றுவதாக சொல்லிக்கொண்டு இருக்கிறார். அதிமுகவை கைப்பற்றுவது இருக்கட்டும். சசிகலாவுக்கு ஒரு எச்சரிக்கை டி.டி.வி. தினகரனிடம் இருந்து உங்களை காப்பாற்றி கொள்ளுங்கள். குடும்பத்தில் இருந்து சசிகலா தன்னை காப்பாற்றி கொள்ளவேண்டும். முதலில் அவர் குடும்பத்தில் ஒற்றுமையை காப்பாற்றிக்கொள்ள சொல்லுங்கள். நான் நிதானமாக பேசுகிறேனா..? என தினகரன் கேட்கிறார். ஆமாம் இவர்தான் எனக்கு “ஊத்திக்” கொடுத்தார். அவரோட தொழிலே “ஊத்திக்” கொடுப்பதுதான். ஊத்திக் கொடுத்தே […]
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்க ஓபிஎஸ் ஆதரவு என்ற செய்தியை நமது எம்ஜிஆர் நாளிதழ் இன்று வெளியிட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் நான்கு சிறை தண்டனை முடிந்து இரு தினங்களுக்கு முன் தமிழகம் திரும்பியுள்ளார். அதிமுகவில் மீண்டும் சசிகலாவை சேர்த்துக்கொள்ள முடியாது என்று அமைச்சர்கள் ஜெயக்குமார், சிவி சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் சிலர் வெளிப்படையாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதே சமயத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை கடுமையாக விமர்சித்து வரும் முதல்வர் பழனிசாமி, சசிகலா குறித்து மறைமுகமாக […]
சசிகலாவை ஜெயலலிதாவின் மறு உருவமாக பார்க்கும் பொதுமக்கள் பார்க்கிறார்கள் கருணாஸ் எம்எல்ஏ. ராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்த திருவாடானையில் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், சசிகலா வருகையின்போது அதிமுக தொண்டர்கள் மட்டுமன்றி ஏராளமான பொதுமக்கள் அவரை வரவேற்றார்கள் என தெரிவித்தார். யாரும் எதிர்பார்க்காத அளவிலே சாதி, மதம் கடந்து அதிமுக தொண்டர்கள் மட்டுமன்றி பொதுமக்கள் அனைவரும் அரவரதத்துடன் வரவேற்றனர். 30 ஆண்டுகளுக்கு மேலாகவே ஜெயலலிதா உடன் பயணித்தது மட்டமல்லாமல், அரசியல் துறையில் அவரின் நிழலாக இருந்தார். அதிமுக தொண்டர்கள் அவரை […]
தமிழக சட்டப்பேரவை தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தமிழக காங்கிரஸ் தலைவர் எச்.வசந்தகுமாரின் மறைவுக்குப் பிறகு கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடம் காலியாகவுள்ளது. இந்நிலையில், அந்த மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தமிழகத்தில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலுடன் நடைபெறும் என சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 68,324 இருந்த வாக்கு சாவடிகள் எண்ணிக்கை தற்போது 93000 ஆக உயர்த்தபட்டு உள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தமிழக தேர்தல் அதிகாரி, அலுவலர்கள் என பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் வரும் தேர்தலில் அதிக வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வாக்காளர்கள், பெண்கள், முதியோர்களுக்கு இந்த தேர்தலில் முக்கியத்துவம் அளிக்கப்படும். நியாயமான, நேர்மையான தேர்தலை நடத்த வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன. வாக்காளர்களுக்கு பணம் […]
வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுடன், சுஷில் சந்திரா, உமேஷ் சின்ஹா, ராஜிவ் குமார் உள்ளிட்ட 8 அதிகாரிகள் நேற்று சென்னை வந்த அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தனித்தனியே தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து இன்று தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக தமிழக தேர்தல் அதிகாரி, அலுவலர்கள் என பல்வேறு துறை அதிகாரிகளுடன், சுனில் […]
தற்போதைய தமிழக சட்டப்பேரவையின் காலம் வருகின்ற மே 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது.இதனால் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா உள்ளிட்ட 8 அதிகாரிகள் நேற்று சென்னை வந்த அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். இன்று இரண்டாவது நாளாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா […]
கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் பொதுக்குழு கூட்டத்தில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் மக்கள் நீதி மய்யத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்குதொடங்கி நடைபெற்றது. இந்த கூட்டம் தலைவா் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 500-க்கும் மேற்ப்பட்ட உறுப்பினா்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், மக்கள் நீதி மய்யம் பொதுக்குழு கூட்டத்தில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில், இந்தி சமஸ்கிருதம் மொழிகளை […]
சசிகலா தேர்தல் நிலைப்பாடு குறித்து அறிவித்த பின்னர் நான் கருத்து கூறுகிறேன் என்று பாஜக மாநில தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார். சென்னை செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் எல் முருகன், சசிகலா நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் வந்துள்ளார். அரசியல் நிலைப்பாடு குறித்து சசிகலா அறிவித்த பின்னரே அதிமுக கூட்டணியில் எந்த மாதிரியான தாக்கம் இருக்கும் என்பதை கூற முடியும் என்று தெரிவித்துள்ளார். அரசியல் கட்சியில் எல்லாருக்கும் வரவேற்பு கொடுப்பது வழக்கம்தான். இது ஒன்னும் […]