தீவிர ரஜினி ஆதரவாளரான கராத்தே தியாகராஜன் பாஜகவில் இணைந்தார்!

Karate Thiagarajan has joined the BJP in the presence of BJP state president L Murugan with his supporters in Chennai.

தீவிர ரஜினி ஆதரவாளரானசென்னை முன்னாள் காங்கிரஸ் துணை மேயர் கராத்தே தியாகராஜன் பாஜகவில் இணைந்தார்.

சென்னை மயிலாப்பூர் தொகுதியில் காங்கிரஸ் நிர்வாகியாக இருந்து வந்த கராத்தே தியாகராஜன் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக கட்சியில் இருந்து சமீபத்தில் இடைநீக்கம் செய்யப்பட்டார். தீவிர ரஜினி ஆதரவாளரான கராத்தே தியாகராஜன், ரஜினி கட்சி தொடங்குவர் என்று எதிர்பார்க்கப்பட்ட வந்த நிலையில், தனது உடல்நிலை கருதி அரசியலுக்கு வரப்போவதில்லை தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, வரும் சட்டமனற்ற தேர்தலை முன்னிட்டு சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டபோது, அதிமுக – பாஜக கூட்டணிக்கே தன்னுடைய ஆதரவு என்று தெரிவித்திருந்த நிலையில், தற்போது சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் பாஜக மாநில தலைவர் எல் முருகன் மற்றும் மேலிட பொறுப்பாளர் சிடி ரவி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார்.