சதமடிக்கும் பெட்ரோல், டீசல் விலை; மக்களை வதைக்கும் பாஜக, அதிமுக அரசுகள் – முக ஸ்டாலின்

Stalin also issued a statement saying that they were pouring petrol on the corona when the fire was not extinguished.

கொரோனா நெருப்பே அணையாத போது விலையேற்றம் என்ற பெட்ரோலையும் ஊற்றுகிறார்கள் என்று முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பெட்ரோல் விலை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு லிட்டர் 90 ரூபாய் கடந்து விற்கப்படுகிறது. டீசல் ஒரு லிட்டருக்கு 83 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், சதமடிக்கும் பெட்ரோல், டீசல் விலை, மக்களை வதைக்கும் பாஜக, அதிமுக அரசுகள் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பெட்ரோல், டீசல் விலையினை நாளுக்கு நாள் உயர்த்தி மக்களை வைத்தது வருகிறது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு.

கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விலை உயர்வு மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் என்றும் பாஜக ஆட்சிக்கு வந்த 10 ஆண்டுகளில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடுமையாக குறைந்தாலும், இந்திய சந்தையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துகொண்டே இருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மத்திய அரசின் கடுமையான வரிவிதிப்பும், மாநில அரசு சார்பிலான வரி விதிப்புகளும் மக்களை வதைக்கும் விலை உயர்வுக்கு காரணம். மக்கள் சுமையைக் குறைக்க வேண்டியதே ஆள்வோரின் பொறுப்பு. இதனால் உடனடியாக மத்திய – மாநில அரசுகள் வரிகளைக் குறைத்து, பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

unknown node