பெய்ரூட்: லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் நேற்று ஒரே நேரத்தில் பல இடங்களில் வாக்கி-டாக்கிகள், மற்றும் சூரிய மின் சக்தியால் இயங்கும் சில உபகரணங்கள் வெடித்து சிதறியுள்ளது. இதில் 32 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அந்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முன்தினம் லெபனானில் பேஜர்கள் வெடித்தச் சம்பவத்தை தொடர்ந்து நேற்றைய தினமும் அதே போல் வாக்கி-டாக்கிகள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வெடித்துச் சிதறி இருக்கிறது. வெடித்து சிதறியுள்ள இந்த […]
அமெரிக்கா : பிரதமர் மோடி வரும் செப்டம்பர் 21ஆம் தேதி 3 நாள் பயணமாக அமெரிக்கா செல்ல உள்ளார். செப்டம்பர் 21, 22, 23 ஆகிய தேதிகளில் அமெரிக்கா செல்லும் பிரதமர் அங்கு நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார் . இந்த மாநாட்டிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமை தாங்குகிறார். இந்த அமெரிக்க பயணத்தில், வரும் செப்டம்பர் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று அமெரிக்கா வாழ் இந்தியர்களை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். இந்த […]
வாஷிங்க்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் மீது நேற்று இரண்டாவது முறையாக துப்பாக்கி சூடு நடைபெற்றது. இந்த சம்பவமே அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தொழிலதிபரான எலான் மஸ்க் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பதிவு தற்போது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. டொனால்ட் டிரம்ப் மீது ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. ஆனால், அதில் அவரது வலதுகாதில் மட்டும் காயம் ஏற்பட்டது. இதனை […]
வாஷிங்க்டன் : நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னாள் அதிபரும், குடியரசு கட்சியின் வேட்பாளரான டிரம்ப் மீது 2-வது முறையாக துப்பாக்கி சூடு நடைபெற்று உள்ளது. மேலும், இந்த துப்பாக்கி சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்கா அதிபரான ஜோ பைடன் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டு கண்டனம் தெரிவித்திருக்கிறார். அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பிடித்து வருகிறது. இதனால், அதிபர் வேட்பளருக்காக போட்டியிடும் டிரம்பும், கமலா ஹாரிஸுக்கும் இடையே […]
வாஷிங்டன் : கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்டு டிரம்ப் இடையே நேற்று நடந்த முதல் அதிபர் தேர்தல் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் முடிவில் கமலா ஹாரிஸ் தான் அடுத்த அமெரிக்கா அதிபராகத் தேர்வாவர் என அமெரிக்க ஊடகங்களில் வெளியான கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் வரும் நவம்பர்-5 ம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இதனால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. மேலும், இரு வேட்பாளர்களும் தங்களது வாக்குறுதிகளைக் கிடைக்கின்ற மேடையில் அறிவித்து […]
அமெரிக்கா : இந்த ஆண்டு நவம்பர் 5-ம் தேதி அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் வெற்றி பெரும் முனைப்பில் இரு கட்சிகளும் தீவிரமாக தங்களது பிரச்சாரத்தை முன்னிறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் முக்கிய நேரடி விவாதம் டொனால்ட் ட்ரம்ப் – கமலா ஹாரிஸ் இருவருக்கும் இடையே பென்சில்வேனியா மாகாணத்தில் இன்று நடைபெற்றது. இந்த விவாதத்தில் யார் வெற்றி பெற்றனர் என்பது நிபுணர்களும் வாக்காளர்களும் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் […]
அமெரிக்கா : இந்த ஆண்டின் இறுதியில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெரும் முனைப்பில் இரு கட்சிகளும் தீவிரமாக தங்களது பிரச்சாரத்தை முன்னிறுத்தி வருகின்றனர். மேலும், தேர்தலுக்கு இரண்டு மாதங்கள் மட்டுமே இருப்பதால் இருவரும் வாக்குறுதிகளையும் கூறிவருகின்றனர். தற்போது வரை ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நிற்கும் கமலா ஹாரிஸின் கை ஓங்கி இருக்கிறது என அங்குள்ள உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் நடக்கும் இந்த ஜனாதிபதி தேர்தலில் சுவாரஸ்யமான விஷயமே […]
மெக்சிகோ : விண்வெளி சோதனைப் பயணமாகக் கடந்த ஜூன்-5ம் தேதி விண்வெளிக்கு ஏவப்பட்ட ஸ்டார்லைனர் விமானம் ஆளில்லாமல் நியூமெக்சிகோவில் உள்ள ஒயிட் சேண்ட்ஸ் ஸ்பேஸ் ஹார்பர் பகுதியில் தரையிறங்கியது. பாராசூட்டின் உதவியுடன் இன்று காலை 9.31 மணி (இந்திய நேரப்படி) அளவில் தரையிறங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூன்-5ம் தேதி விண்வெளி சோதனைக்காக 8 நாள் பயணமாகப் புகழ் பெற்ற விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸும், புட்ச் வில்மோரும் ஸ்டர்லைனர் விண்கலம் மூலம் புறப்பட்டனர். 8 […]
மெக்சிகோ : விண்வெளி வீரர்களான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோரின் சோதனைப் பயணம், புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் விண்வெளிப் படை நிலையத்தில் உள்ள விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஜூன் 5ஆம் தேதி ஏவப்பட்டது. ஆரம்பத்தில் 8 நாள் பயணமாக திட்டமிடப்பட்ட இந்த பயணம் ஜூன் 14ஆம் தேதி பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர்கள் பூமி திரும்புவது சிக்கலானது. விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப […]
சிங்கப்பூர் : பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக புருனே மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளர். நேற்று புருனே நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று மாலையில் சிங்கப்பூர் சென்றடைந்தார். இன்று அந்நாட்டு பிரதமர் லாரன்ஸ் வோங்கை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு லாரன்ஸ் வோங் தலைமையில், அரசு உயர்மட்டக் குழு சார்பில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, இரு நாட்டு உறவுகள் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். அதனுடே, சிங்கப்பூரில் திருவள்ளுவர் […]
சிங்கப்பூர் : பிரதமர் மோடி புரூனே நாட்டுக்கு நேற்று முன்தினம் அரசு முறை பயணமாகப் புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து, சிங்கப்பூர் பிரதமரின் அழைப்பை ஏற்று 2 நாட்கள் அரசு முறைப் பயணமாகச் சிங்கப்பூருக்குச் சென்றார். அதன்படி, நேற்று மாலையில் சிங்கப்பூர் விமான நிலையத்திற்குச் சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உள்துறை மற்றும் சட்ட அமைச்சருமான கே.ஷண்முகம் நேரில் சென்று வரவேற்றார். அதனைத் தொடர்ந்து, இன்று காலை பிரதமர் மோடி சிங்கப்பூர் நாடாளுமன்றத்திற்குச் சென்றடைந்தார். அங்கு அவரை சிங்கப்பூர் […]
புருனே : பிரதமர் மோடி வெளிநாட்டு பயணமாக புருனே சென்றுள்ளார். இந்தியா – புருனே இரு நாட்டு நல்லுறவை மேம்படுத்தும் முயற்சியில் இரு நாட்டு தலைவர்களும் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர். புருனே சென்ற பிரதமர் மோடியை விமான நிலையத்தில் பட்டத்து இளவரசர் ஹாஜி அல் முஹததீ பில்லா வரவேற்றார். அதன்பிறகு, நூருல் இமான் மாளிகையில் புருனே சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியா மற்றும் அவரது குடும்பத்தினர் பிரதமர் மோடியை வரவேற்றனர். பின்னர், இமான் […]
ஸ்வீடன் : 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், குழந்தைகள் டிஜிட்டல் ஊடகங்ளை அணுகவதால் பாதிப்பு ஏற்படுகிறது என புதிய ஆய்வறிக்கையில் கண்டுபிடித்துள்ளனர். இதனால், ஸ்வீடன் அரசு 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் யாரும் டிவி, மொபைல் உபஜியோகிக்க கூடாது என தடை விதித்துள்ளனர். இது, ஸ்வீடன் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்தில் பெரும்பாலான சிறுவர்கள் குழந்தைகள் தீவிரமாக மொபைல், டிவி மற்றும் இணையத்தளம் போன்ற விஷயங்களுக்கு அடிமைகளாக இருந்து வருகின்றனர். இது […]
இலங்கை : இலங்கை அதிபர் பதவிக்கான தேர்தல் வரும் 21ம் தேதி நடக்க உள்ள நிலையில், அனைத்து விதமான விவசாயக் கடன்களையும் உடனே தள்ளுபடி செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்களிப்புக்கு இலங்கை தயாராகி வருகிறது. நாளை தபால் வாக்கு பதிவு மூலம் அரச அதிகாரிகள் வாக்களிக்கவுள்ளனர். தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா இடையே கடும் போட்டி நிலவி […]
பிரேசில் : உலகின் கோடீஸ்வர தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் சமூகத்தளமான ‘எக்ஸ் (X)’ தளத்திற்கு தற்காலிமாக பிரேசில் நாடு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. எலான் மஸ்க், பிரேசில் இடையேயான சர்ச்சை ..! இந்த ஆண்டில் கடந்த ஏப்ரல் மாதத்தில், பிரேசில் நாட்டில் எக்ஸ் தளத்தில் சில போலி தகவல்கள் பரவியதால் ஒரு சில குறிப்பிட்ட கணக்குகளை முடக்க வேண்டுமென பிரேசில் நாட்டில் உள்ள உச்சநீதீமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக எலான் மஸ்க் கண்டனம் தெரிவித்திருந்தார். […]
கோவிட்-19 : 2019ஆம் ஆண்டு சீனாவில் உருவாகி, பரவ தொடங்கி சுமார் 2 ஆண்டுகள் உலகையே உலுக்கிய கொரோனா பெருந்தொற்று பற்றி தற்போது மேலும் ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்றுக்கு காரணமான SARS-CoV-2 எனும் வைரஸ் மனித மூளையை பாதிக்க செய்யும் என ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்த வைரஸ் மனித செல் புரதத்தில் உள்ள பிறழ்வுகளின் வழியாக மூளை செல்களுக்கு நுழையும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனை சில கொரோனா தொற்று நோயாளிகளிடம் […]
டெல்லி : ரஷ்யா – உக்ரைன் போருக்கு நடுவே இந்தியாவின் அகிம்சை பாதையில் பிரதமர் மோடி மேற்கொள்ளும் ராஜதந்திர செயல்பாடுகள், உலகரங்கில் இந்தியாயவை முன்னிலைப்படுத்துகிறது. ரஷ்யா – உக்ரைன் போர் கடந்த 2022 பிப்ரவரியில் தொடங்கி தற்போது வரையில் பல்வேறு இடங்களில் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு உலக நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாகவும், சில நாடுகள் ரஷ்யாவுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகின்றன. ஆனால் இதில் இந்தியாவின் நிலைப்பாடு என்பது இரு நாட்டுக்கும் ஆதரவு என்ற சமநிலையில் உள்ளது. […]
ரஷ்யா : உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ரஷ்ய நாட்டின் எண்ணெய்க் கிணறு கொழுந்து விட்டு எரிவதாக அந்நாட்டுச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 2022 ஆண்டு பிப்ரவரி முதல் தற்போது வரையில் ரஷ்யா – உக்ரைன் இடையே போர் இடைவிடாமல் நடந்து வருகிறது. இதில் பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டும் வருகிறது. ஆனாலும், இந்த போர் முடிவுக்கு கொண்டு வருவதற்கான எந்த ஒரு தீர்மானத்தையும் இரு நாடுகளும் இது வரை எடுத்ததாக தெரியவில்லை. […]
சூடான் : கிழக்கு சூடானில் அணை இடிந்து விழுந்ததில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளதாக ஐ.நா தகவல் தெரிவித்துள்ளது. குடியரசு ஆப்பிரிக்கக் கண்டத்தில் அமைந்துள்ள கிழக்கு சூடானில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கு காரணமாக அணை ஒன்று உடைந்து விபத்துக்குள்ளானது. உடைந்த அணையில் இருந்து வெளியேறிய நீரில் அடித்துச் செல்லப்பட்டதில் 30 பேர் உயிரிழந்தனர்என்று ஐக்கிய நாடுகள் சபையின் அவசரகால நிவாரண நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த சம்பம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சூடானின் வடமேற்கு செங்கடல் […]
அமெரிக்கா : ஜோ பைடன் தூங்கிக் கொண்டு இருப்பதால் மூன்றாம் உலகப்போர் நடைபெற வாய்ப்பு உள்ளது என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். அமெரிக்காவில் நாளுக்குநாள் நடைபெறப் போகும் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் என்பது தீவிரமடைந்து வருகிறது. அதில் மாநாட்டில் மூலமாக ஜனநாயக கட்சியும் தங்களது பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். இதனால், ஆரம்பத்தில் முன்னாள் அதிபரும் தற்போதைய அதிபர் வேட்பாளருமான டொனால்டு ட்ரம்ப்புக்கு ஆதரவு எப்படி இருக்கிறதோ, அதற்கு இணையாகவே ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரும் தற்போதைய துணை வேட்பாளருமான […]