சமூக பொறுப்பு குறித்து நல்லா பேசுறீங்க.. வாக்களிக்க வராதது ஏன்? ஜோதிகா நச் பதில்.!

Published by
கெளதம்

Jothika : அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு நடிகை ஜோதிகா பதில் அளித்துள்ளார்.

இயக்குனர் துஷார் ஹிரானந்தனி இயக்கிய ‘ஸ்ரீகாந்த்’ என்ற படத்தில் ராஜ்குமார் ராவ் நாயகனாக நடிக்கும் திரைப்படத்தில் நடிகை ஜோதிகா நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருக்கிறார்.

நடிகை ஜோதிகா சமீபத்தில், தனது கணவர் சூர்யா மற்றும் குழந்தைகளுடன் மும்பைக்கு குடிபெயர்ந்தார். இதனால், அவர் மக்களவ தேர்தலுக்கு வரவில்லையா என இணையவாசிகள் கேள்விகள் எழுப்பி வந்தனர்.

இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற சித்தியாளர் சந்திப்பில், சமூக பொறுப்பைக் குறித்து பேசும் நீங்களே வாக்களிக்க செல்லாதது ஏன்? என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “வேலை காரணமாக வெளியூரில் இருந்ததாகவும், தனது தனிப்பட்ட உரிமைக்கு மதிப்பளித்து அதில் தலையிடாமல் இருப்பது நல்லது எனவும் கூறினார்.

ஒவ்வொரு முறையும் நாங்கள் வாக்களிக்கிறோம். சில நேரங்களில், சில நேரங்களில் வெளியூர் செல்ல வேண்டியது இருக்கலாம், நோய்வாய்ப்படலாம். இது ஒரு தனிப்பட்ட விஷயம் போன்றது” என்றார்.

மேலும், அரசியலுக்கு வந்தால் நிறைய அதிகாரம் இருக்கும்; நீங்கள் ஏன் அரசியலுக்கு வரக் கூடாது? என செய்தியாளர் கேள்வி எழுப்பியதற்கு, ஜோதிகா “யாரும் என்னைக் கூப்பிடவில்லை, எந்த அரசியல் கட்சியும் என்னை அணுகவில்லை.  தற்போது, ஃபிட்னஸில் ஆர்வமாக இருப்பதால் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என நடிகை ஜோதிகா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இப்போதைக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் எதுவும் இல்லை, என்னுடைய 2 குழந்தைகள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் கவனிக்கவும், என்னுடைய நடிப்பைக் கவனிக்கவும்தான் இப்போதைக்கு எனக்கு நேரம் இருக்கிறது, அரசியலுக்கு வர வாய்ப்பு இல்லை” என்று கூறிஉள்ளார். 

Published by
கெளதம்

Recent Posts

மதராஸி திரைப்படத்தின் முதல் பாடலான ”சலம்பல” ப்ரோமோ வெளியீடு.!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமாக "மதராஸி" படத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குநர் முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்,…

2 hours ago

“இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கினோம்” – ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு பிரதமர் விளக்கம்.!

டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், 'தாக்குவது என்று முடிவெடுத்துவிட்டால், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.…

2 hours ago

நாளை விண்ணில் பாயும் ”நிசார்” செயற்கைக்கோள்.! கவுண்ட் டவுன் ஸ்டார்ட்.!

ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…

3 hours ago

”இதற்குமேல் தாங்க முடியாது என பாகிஸ்தான் கெஞ்சியது” – பிரதமர் மோடி.!

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…

4 hours ago

அதிபர் டிரம்பிடம் இதையெல்லாம் கேட்க முடியுமா? – பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சவால்.!

டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…

4 hours ago

ராமேஸ்வரம் மீனவர்கள் கைது.., வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…

4 hours ago