Leo Fourth Single [File Image]
ரசிகர்கள் அனைவரும் ஆரவாரமாக காத்திருக்கும் லியோ திரைப்படத்தின் 4 வது சிங்கிள் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் அனிருத் தின் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. இந்த திரைப்படத்தில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், சாண்டி, மேத்யூ தாமஸ் மற்றும் பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி முதல் உலகளவில் ரிலீசாக காத்திருக்கிறது. நேற்று இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ, ‘லியோ’ படம் ஐமேக்ஸில் வெளியாகவுள்ளது என்று புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டது. அந்த அனல் பறக்கும் போஸ்டர் தற்பொழுது, இணையத்தில் வைரலாகி வருகிறது.
Leo In LCU : லியோ ‘LCU’ தான்! உண்மையை உடைத்த ரோலக்ஸ் கேங்க்! கடும் அப்செட்டில் லோகேஷ்!
தமிழ் சினிமாவில் ஐமேக்ஸ் வடிவில் எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் பாகம் 1, பொன்னியின் செல்வன் பாகம் 2 ஆகியவற்றை தொடர்ந்து, ஐமேக்ஸில் வெளியாகும் மூன்றாவது படம் ‘லியோ’ என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் இருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளது. அதில், முதல் பாடலான ‘நான் ரெடி தான்’ பாடல் பட்டையை கிளப்பியது. இதனை தொடர்ந்து வெளியான இரண்டாம் பாடலான (Badass) படாஸ் ஒரு வைப்-ஐ உண்டாக்கியது. இந்த இரண்டு பாடல்களும் இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
கோவிந்தா…கோவிந்தா…’லியோ’ வெற்றிக்காக படக்குழு திருப்பதியில் தரிசனம்!
சமீபத்தில், ‘அன்பெனும்’ என தொடங்கும் அந்த பாடல் வெளியான இந்த பாடலை கேட்கும்போதே மனதை உருக்கும் வகையில் இசையும் குரலும் அமைந்திருந்தது. இப்பொது, வெளியாக விருக்கும் பாடல் ஒரு வில்லனை வெளிப்படுத்தும் பாடலாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
LeoThirdSingle : உருக வைக்கும் அனிருத் இசை! ‘லியோ’ படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு!
மேலும், இந்த பாடல் குறித்த அறிவிப்பு நாளை அல்லது மறுநாள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் அக்டோபர் 16ம் தேதி இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாள். அன்றைய தினத்தை சிறப்பாக சிறப்பான சம்பவம் காத்திருக்கிறது என தெரிகிறது. பாடலின் ‘I’m Scared’ ஆக இருக்கலாம் என ஒரு தகவல் பரவி வருகிறது.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…