முதல தள்ளி போ! ரசிகர் செய்த செயலால் கடுப்பான டாப்ஸி..வைரலாகும் வீடியோ!

டாப்ஸி பன்னு : பிரபல நடிகையான டாப்ஸி பன்னு பெயர் சமீபகாலமாக ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. அதற்கு ஒரு காரணம் அவருடைய திருமணம் தான். அவர் தனது நீண்ட நாள் காதலர் மத்தியாஸ் போவை கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார். அதில் இருந்து அவருடைய பெயர் ட்ரெண்டிங்கில் இருந்து வரும் நிலையில், தற்போது ரசிகர் செய்த செயலால் கடுப்பான வீடியோ ஒன்றும் சமூக வளைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் மும்பையில் ஒரு படத்தின் பிரீமியர் ஷோ பார்ப்பதற்காக டாப்ஸி வருகை தந்தார். அப்போது படம் பார்த்துவிட்டு வெளிய வந்த நிலையில், வெளியே ரசிகர்கள் பலரும் கூட்டமாக நின்று கொண்டு டாப்ஸியுடன் செல்பி எடுக்க முயற்சி செய்தனர். ஆனால், டாப்ஸி செல்பி எடுக்காமல் வேகமாக காருக்குள் செல்ல முயற்சி செய்தார். எனவே, சிலர் டாப்ஸி சரியான மனநிலையில் இல்லை என்று அவருடைய உணர்வுக்கு மதிப்பளித்து விலகி சென்றார்கள்.
இருப்பினும், ஒரே ஒரு ரசிகர் மட்டும் டாப்ஸியை பின் தொடர்ந்து “மேடம் ஒரு செல்பி…மேடம் ஒரு செல்பி ” என்று கூறி சென்றார். டாப்ஸி காரில் ஏறும்போதும் கூட காரை திறக்கவிடாமல் வழியில் நின்று கொண்டு ப்ளீஸ் என ஒரு செல்பிக்கு கெஞ்சவும் செய்தார். ஒரு கட்டத்தில் கடுப்பான டாப்ஸி முதல தள்ளி போ என்பது போல கூறிவிட்டு காரில் ஏறி சென்றார். இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Catch #TaapseePannu in a rush, asking fans and paparazzi to step aside and let her through ???????? #Pinkvilla pic.twitter.com/uRzgkz56Bz
— Pinkvilla (@pinkvilla) June 13, 2024
மேலும், நடிகை டாப்ஸி தற்போது ‘ஃபிர் ஆயா ஹசீன் தில்ருபா’ (Phir Aayi Haseen Dillruba) என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் தற்போது டாப்ஸி பிசியாக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்.., இந்தியாவை மிரட்டிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அவுட்.!
July 11, 2025
”லோகேஷ் மீது கோவமாக உள்ளேன்” – நடிகர் சஞ்சய் தத்.!
July 11, 2025