சேர்ந்து வாழ ஆசைப்படும் ஆர்த்தி! பேச வாய்ப்பு கொடுப்பாரா ஜெயம் ரவி?
விவாகரத்து பிரச்சினையை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி முழுவதுமாக சென்னையில் இருந்து வெளியேறி மும்பைக்கு குடியேறவுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : ஜெயம் ரவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய முடிவு செய்து இருந்தாலும் ஆர்த்திக்கு அவருடன் இணைந்து வாழவேண்டும் என்பது தான் ஆசையாக இருக்கிறது. அதற்கு, ஒரு முக்கியமான உதாரணம் சொல்லலாம் என்றால் பரஸ்பர விவாகரத்துக்கு தனக்கு விருப்பம் இல்லை என ஆர்த்தி தன்னுடைய அறிக்கையில் சொல்லி இருக்கிறார்.
அதைப்போல மற்றொரு, பக்கம் நடிகர் ஜெயம் ரவியும் எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் விவகாரத்துக்காகக் காத்திருப்பேன் அது தான் தன்னுடைய முடிவு என்று அவருடைய, முடிவில் உறுதியாக இருக்கிறார். இருப்பினும், தனிப்பட்ட முறையில், ஜெயம் ரவியுடன் பேசும் வாய்ப்புக்காக ஆர்த்தி காத்திருக்கிறார். ஆனால், ஜெயம் ரவி இதனைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.
ஜெயம் ரவி இப்படி இருப்பதற்கான காரணத்தைப் பற்றியும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசியிருந்ததாகக் கூறப்படுகிறது. அதாவது, ஆர்த்தி தன்னை மோசமாக நடத்தியதாகவும், வீட்டுப் பணியாளருக்குக் கொடுக்கும் மரியாதை கூட தனக்குக் கொடுக்கவில்லை எனவும் அவரை போலத் தான் அவருடைய அம்மாவும் என வெளிப்படையாகவே குற்றம்சாட்டிப் பேசியிருந்தார்.
இதனால் ஆர்த்தி மீது எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தது. இதனையடுத்து, இது தனிப்பட்ட வாழ்க்கை பிரச்சினை என்பதால் இதற்குப் பதில் அளிக்க விருப்பம் இல்லை எனவும் ஆர்த்தி கூறியிருந்தார். ஜெயம் ரவி ஆர்த்தி குறித்துப் பேசினாலும், ஆர்த்தி ஜெயம் ரவி குறித்து எதுவும் பேசாமல் இருக்கிறார். அதன் மூலமே அவர் ஜெயம் ரவி மீது பாசம் வைத்து இருக்கிறார் என்பது தெரிகிறது என ஒரு பக்கம் பேச்சுக்கள் எழுந்துள்ளது.
இதன் காரணமாகவே, ரசிகர்கள் பலருடைய எதிர்பார்ப்புக்காக இருக்கும் விஷயம் இருவரும் மீண்டும் இணைந்து ஒன்றாக வாழ்வது தான். ஆனால், அது நடக்க வாய்ப்பு இல்லை என்று தான் கூறப்படுகிறது. ஏனென்றால், விவாகரத்து முடிவில் மட்டுமே உறுதியாக இருக்கும் ஜெயம் ரவி முழுவதுமாக சென்னையிலிருந்து வெளியேறி மும்பைக்குக் குடியேறவுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளது.
அது மட்டுமின்றி, இனிமேல் அவர் தன்னுடைய கவனத்தை முழுக்க முழுக்க சினிமாவில் செலுத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. பேச வாய்ப்பு கேட்டுள்ள ஆர்த்திக்கு ஜெயம் ரவி வாய்ப்பு கொடுப்பாரா? அல்லது விவாகரத்து முடிவில் தான் உறுதியாக இருப்பாரா? என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.