நடிகர் பிரசாந்த் இப்படி பட்டவரா..? உண்மையை உடைத்த நடிகை சங்கவி..!!

ஒரு காலகட்டத்தில் ரரசிகர்களால் ஆணழகன் என்று அழைக்கப்பட்டவர் நடிகர் பிரசாந்த். இவருக்கு ஆரம்ப காலகட்டத்தில் இருந்த ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். இந்நிலையில், பிரசாந்துடன் நடித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் அவரை பற்றி பேசுவது நாம் பார்த்திருப்போம்.

அந்த வகையில், பிரசாந்துடன் மன்னவா திரைப்படத்தில் நடித்திருந்த பிரபல நடிகையான சங்கவி சமீபத்திய ஊடகத்திற்கு கொடுத்த பேட்டி ஒன்றில் பிரசாந்த் பற்றி பேசியுள்ளார். அந்த பேட்டியில் பேசிய அவர் ” பிரசாந்தும் நானும் சண்டைபோட்டு கொண்டே தான் இருப்போம்.

Tom மற்றும் Jerry எப்படி இருக்கும். அந்த மாதிரி தான் நாங்கள் இருப்போம் இருப்போம். எங்கள் இருவருக்குள்ளும் எல்லா விஷயங்களிலும் ஒரு போட்டி இருந்து கொண்டே இருக்கும். அந்த மாதிரி தான் எங்களுக்குள் இருந்தது தவிர நாங்கள் இருவரும் நண்பர்களாக இருந்து இல்லை.

மன்னவா திரைப்படம் பன்னும்போது கூட என்னை வெறுப்பேற்ற வேண்டும் என்பதற்காக பல விஷயங்களை செய்வார். படத்தின் பாடல் காட்சிகளில் கூட பலூன் உடைப்பது போன்ற காட்சிகள் வரும் அந்த காட்சிகளின் போது வேணுமென்ற, அவர் பலூனை உடைத்து என்னை வெறுப்பேற்றுவார்.

எப்போதுமே அவர் மிகவும் குறும்புத்தனமான இருப்பார். படப்பிடிப்பு சமயத்தில் கூட, நாம் நடிப்பதை பார்த்துவிட்டு அதைவிட நன்றாக நடிக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டு நன்றாக நடிப்பார். எங்கள் இருவருக்கும் அப்போதிலிருந்தே போட்டி தான்” என கூறியுள்ளார். மேலும் நடிகை சங்கவி ரசிகன், கோவை மாப்பிள்ளை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.