அரசியலுக்கு எப்போது? ‘இதுவே நல்லா இருக்குனே’ ரூட்டை மாற்றிய நடிகர் சூரி.!

திருச்சியில் சோனா மீனா திரையரங்கிற்கு ‘விடுதலை-2’ திரைப்படம் பார்க்க வந்த நடிகர் சூரியை, ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

actor soori

திருச்சி: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் வெளிவந்துள்ள “விடுதலை 2” இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வெற்றிமாறனின் இயக்கம், திரைக்கதை நேர்த்தியாக இருப்பதாகவும், விஜய் சேதுபதியின் நடிப்பு மிரட்டலாக இருப்பதாகவும் பாராட்டுகிறார்கள்.

இந்த நிலையில், திருச்சி மாவட்டம் சோனா மீனா திரையரங்கிற்கு ‘விடுதலை-2’ திரைப்படம் பார்க்க வந்த நடிகர் சூரியை, ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். படம் பார்த்துவிட்டு செய்தியாளர்களிடம் பேட்டியளித்த நடிகர் சூரி, “கமர்ஷியல் தாண்டி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அரசியல் ‘விடுதலை 2’படத்தில் இருக்கிறது.

இயற்கையோடு ஒன்றி எடுக்கப்பட்ட இந்தப் படத்தை, மக்கள் அதிகம்புரிந்து கொள்ள வேண்டும். விடுதலை 2 படத்தை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.  இந்த படம் மக்களுக்கு வலி மிகுந்தஉணர்வை கொடுக்கும். அடுத்தடுத்து கதை நாயகனாக பயணிப்பேன் என்றார். செய்தியாளர் ஒருவர், இப்பொது நாயகனாக பயணிக்கிறீங்க எப்போது அரசியலுக்கு வருவீங்க என்று கேட்டதற்கு சூரி,  “அரசியலல் எதுக்குங்க சினிமாவே நன்றாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

பின்னர், அடுத்த தளபதி சூரி.., அடுத்த சூப்பர் ஸ்டார் சூரி.. என கத்திய ரசிகர்களைப் பார்த்து, எப்பா ஏய்… அமைதியா இருங்கய்யா, எதுக்குய்யா., உங்கள்ல ஒருத்தரா இருக்கறதே எனக்கு நல்லது என நடிகர் சூரி சிரித்தபடியே பேசினார். இறுதியில் ‘நல்ல கதை அமைந்தால் சிவகார்த்திகேயனோடு மீண்டும் இணைந்து நடிப்பேன். கதாநாயகனாக நடிப்பது குறித்து சிவகார்த்திகேயன் தான் முடிவு செய்ய வேண்டும்’ என்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்