dhivya duraisamy
Dhivya Duraisamy : சூர்யா தன்னை பார்த்தவுடன் தூக்கிட்டாரு என் நடிகை திவ்யா துரைசாமி தெரிவித்துள்ளார்.
புகைப்படங்களை வெளியீட்டு பிரபலமான பல நடிகைகள் தற்போது படங்களில் நடித்து கலக்கி கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில், குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் திவ்யா துரைசாமியை சொல்லலாம். இவருடைய கவர்ச்சி புகைப்படங்களின் மூலமே இவர் மக்களுக்கு மத்தியில் குறுகிய காலத்திலே பிரபலமானார். பலரும் இவரை டெஸ்லா என்று கூட அழைத்தார்கள்.
இதன் காரணமாகவே நடிகை திவ்யா துரைசாமிக்கு சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். படத்தில் அவருடைய கதாபாத்திரம் குறைவாக வந்தாலும் கூட நல்ல வரவேற்ப்பை கிடைத்தது என்று கூட சொல்லலாம். இந்த படத்திற்கு பிறகு திவ்யா துரைசாமிக்கு ப்ளூ ஸ்டார் படத்திலும் கூட நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அந்த படத்திலும் அவர் நடித்த கதாபாத்திரத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது என்றே சொல்லலாம். இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை திவ்யா துரைசாமி எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்த அனுபவம் பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய நடிகை திவ்யா துரைசாமி ” எனக்கு சூர்யா சாருடன் நடிக்கும்போது சற்று பயமாக இருந்தது.
குறிப்பாக ஒரு காட்சியில் என்னை சூர்யா சார் தூக்கி கொண்டு செல்வது போல காட்சி இருக்கும். அந்த காட்சியில் நடிக்கும்போது ரொம்பவே பயமாக இருந்தது. ஏனென்றால் நான் சற்று குண்டாக இருக்கிறேன் என்னை எப்படி சூர்யா சார் தூக்குவார் என்று யோசித்து கொண்டு இருந்தேன் பயமாக இருந்தது. ஆனால், பார்த்த உடனே பட்டுனு தூக்கிட்டாரு.
தூக்கிவிட்டு என்னுடைய எலும்பு எதுவும் குத்தியது என்றால் என்னிடம் சொல்லு நான் உடனடியாக உன்னை கீழே இறக்கி விடுகிறேன் என்று கூறினார். நான் தான் பயந்து கொண்டு இருந்தேன் சூர்யா சாருக்கு சுத்தமாக பயமே இல்லை என்னை தூக்கிவிட்டார்” என்று திவ்யா துரைசாமி தெரிவித்துள்ளார். மேலும், திவ்யா துரைசாமி தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் மீண்டும் புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஆசியக் கோப்பையில் இருந்து இந்தியா விலகுவதாக வெளியான செய்திகளை பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். அடுத்த…
டெல்லி : பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களுக்கு, அவர்களின் சொந்த சகோதரியைக் கொண்டே பாடம் கற்பித்துள்ளோம் என…
சென்னை : மத்திய கிழக்கு அரபிக் கடலில் வரும் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.…
தூத்துக்குடி மாவட்டத்தில், காருக்குள் கருகிய நிலையில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி…
சென்னை : நடிகர் விஷால் எதாவது நிகழ்ச்சிக்கு சென்றாலே அவரிடம் அடுத்த என படம் நடிக்கிறீர்கள் என்று கேட்பதை விட உங்களுக்கு…