லேடி சூப்பர் ஸ்டார்னு கூப்பிடாதீங்க! நடிகை நயன்தாரா வேண்டுகோள்!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் அன்புடன் அழைக்கும் நடிகை நயன்தாரா. இவர் 16-ஆண்டுகளாக சினிமா துறையில் கலக்கி கொண்டு இருக்கிறார். ஒரு பெரிய நடிகருக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறதோ அதே அளவிற்கு இவருக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். பல ஆண்டுகள் கடந்து திருமணம் முடிந்து நயன்தாரா முன்னனணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான அன்னபூரணி படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து நீண்ட மாதங்களுக்கு பிறகு நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பல கேள்விகளுக்கு பதில் அளித்தும் அன்னபூரணி படம் பற்றியும் பேசியுள்ளார். அந்த நேர்காணலில் பேசிய நயன்தாரா ” எனக்கு இந்த அன்னபூரணி படம் ரொம்பவே ஸ்பெஷலான படம்.
வெள்ள நிவாரணத்திலும் பிசினஸ் முக்கியமா? உதவி செய்து சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா!
என்னுடைய 75-வது படமாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ராஜா ராணி படத்திற்கு பிறகு நானும் ஜெய் மற்றும் சத்யாராஜ் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளேன். எனக்கு சினிமா துறையில் அப்பா என்றால் சத்யராஜ் சார் தான். எனக்கு அவரை அந்த அளவிற்கு பிடிக்கும். அதைப்போலவே ஜெய் கும் எனக்கு நல்ல பிரண்ட்ஷிப் உள்ளது. அவருடன் நான் ராஜா ராணி படத்தில் நடிக்கும் போது பழகும் வாய்ப்பு கிடைத்தது.
படத்தில் நாங்கள் நடித்த காட்சிகள் கொஞ்சம் தான் ஆனால் எங்களுக்குள் நல்ல நட்பு ஏற்பட்டது”எனவும் நடிகை நயன்தாரா கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய நடிகை நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்தும் பேசினார். இது குறித்தும் பேசிய அவர் ” ப்ளீஸ் என்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று கூப்பிடாதீங்க நிறைய பேர் இப்படி சொல்வதால் என்னை திட்டுகிறார்கள்.
லேடி சூப்பர் ஸ்டார் என்று சொன்னால் என்னை 10 பேர் பாராட்டினால் பலர் என்னை திட்றாங்க. எனவ, இதன் காரணமாக தான் இந்த முறை அன்னபூரணி படத்தில் என்னுடைய பெயரில் கூட லேடி சூப்பர் ஸ்டார் என்று பட்டம் போட வேண்டாம் என்று கூறினேன். ஆனால், எனக்கே தெரியாமல் படத்தில் என்னுடைய பெயரில் லேடி சூப்பர் ஸ்டார் என்று போட்டு வைத்து இருக்கிறார்கள்” எனவும் நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025