ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த படம் .! டைட்டில் மோஷன் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்.!

ஐஸ்வர்யா ராஜேஷ் தனது 25வது படத்திற்கு பூமிகா என்று பெயரிடப்பட்டுள்ள டைட்டிலை வெளியிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் தனது 25வது படத்திற்கு பூமிகா என்று பெயரிடப்பட்டுள்ள டைட்டிலை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்து வந்தவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் 2010இல் வெளியான நீதான் அவன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.அதனையடுத்து தெலுங்கு, மலையாளம் ஆகிய படங்களில் நடித்தது மட்டுமில்லாமல் ஒரு இந்தி படத்திலும் நடித்துள்ளார். தற்போது இவர் நடிகைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இவர் திரையுலகில் அறிமுகமாகிய 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் 25 படங்கள் என்ற மைல்கல்லை பிடித்துள்ளார். தற்போது அவரது 25வது படத்தின் டைட்டில் மோஷன் போஸ்ட்ர் வெளியாகியுள்ளது.அதனை  சிவகார்த்திகேயன்வெளியிட்டுள்ளார் .  ‘பூமிகா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் அவர்கள் தயாரிக்க ரவீந்திரன் பிரசாத் இயக்குகிறார். மேலும் இந்த படத்திற்கு பிருத்வி சந்திரசேகர் இசையமைக்க ராபர்ட்டோ ஜாஜ்ரா ஒளிப்பதிவு செய்கிறார். லாக்டவுன் முடிந்ததும் படப்பிடிப்புகள் தொடங்கவுள்ள இந்த படத்தினை குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சினிமாயுலகில் 10 ஆண்டுகளில் 25 படங்கள் மைல்கல்லை தொட்ட ஐஸ்வர்யா ராஜேஷூக்கு பிரபலங்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.