அஜித் ரசிகர்களின் அட்டகாசமான செயல்! குவியும் பாராட்டுக்கள்!

அஜித் ரசிகர்களின் அட்டகாசமான செயல்.
தமிழ் சினிமாவை பொறுத்தவரையில், விஜய் மற்றும் அஜித் ரசிகர்களுக்கு என்று பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அந்த வகையில், ஒவ்வொரு படத்தின் ரிலீஸின் போதும், மற்ற நேரங்களிலும் ரசிகர் மன்றம் சார்பாக அனைவரும் இணைந்து மக்களுக்கு தொண்டு செய்வது வழக்கம்.
அந்த வகையில், சிவகாசியை சேர்ந்த ‘head of sivakasi thala blood’ என்ற அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் அனைவரும் இணைந்து ஆதரவற்ற முதியோர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை தேடி சென்று முடி திருத்துவது, குளிப்பாட்டுவது, புத்தாடை வாங்கி கொடுத்தால் போன்ற சமூக பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் இணைந்து வாரம் ஒரு முறை ஒரு காரணத்தை முன்வைத்து இப்படிப்பட்ட பணிகளில் ஈடுபட்ட வருகின்றனர். அந்த வகையில், இவர்கள் தற்போது, வலிமை படத்தின் அப்டேட் கேட்டு இந்த பாணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களது இந்த செயலுக்கு பொது மக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025