“வலிமை” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் அடுத்ததாக ஹெச்,வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தையும் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார்.
அஜித் -ஹெச் வினோத் -போனிகபூர் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது திரைப்படம் இது. நேர்கொண்ட பார்வை, வலிமை, ஆகிய படங்களை தொடர்ந்து மூவரும் கூட்டணி அமைத்துள்ளனர். படத்திற்கு தாற்காலிகமாக “AK61” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்திற்காக நடிகர் அஜித்குமார் 25 கிலோ உடல் எடையை குறைக்கவுள்ளார். மணி ஹெய்ஸ்ட் சாயலில் இந்த படம் உருவாகவுள்ளதாகவும் தெரிகிறது. வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி ஹைதராபாத்தில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.
இந்த நிலையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன் லால் மற்றும் நாகார்ஜுனா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்பே அவர்கள் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் அப்போது பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருந்ததாம். இப்பொது இவர்கள் நடிப்பது உறுதியாகிவிட்டதாகவும் நம்ப தகுந்த சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றார்கள். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : நெல்லை ஆணவக் கொலை "நீளும் சாதிய அருவருப்பின் அட்டூழியம்" என்று இயக்குநர் மாரி செல்வராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 2025-26 கல்வியாண்டிற்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலியை கட்சித் தலைவர் விஜய் நாளை (ஜூலை…
டெல்லி : நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி, மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன்…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் பேசிய எம்.பி. பிரியங்கா காந்தி, ''பஹல்காம் தாக்குதல் உளவுத் துறையின்…
டெல்லி : நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி, மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், “தமிழன் கங்கையை வெல்லுவான்,…