anirudh and shankar
இந்தியன் 2 : ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், நெடுமுடி வேணு, சித்தார்த், விவேக், டெல்லி கணேஷ், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘இந்தியன் 2’. லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
இந்த திரைப்படம் வரும் ஜூலை 12-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக படத்தின் ட்ரைலர் இன்று வெளியாக இருக்கிறது.
இதனையடுத்து, படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் அனிருத், ஷங்கர், சித்தார்த், உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். அப்போது பேசிய இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 பற்றியும், அனிருத் இசை பற்றியும் பேசினார். மேடையில் பேசிய ஷங்கர் ” இன்றயை காலகட்டத்தில் இந்தியன் தாத்தா வந்தால் எப்படி இருக்குமோ அது தான் இந்தியன் 2.
இந்த படத்தில் இந்தியன் தாத்தாவை தவிர்த்து இன்னும் சில காதாபாத்திரங்கள் அதாவது குடும்பமாக நிறைய கதாபாத்திரங்கள் படத்தில் வரும். கண்டிப்பாக இந்த படத்தை பார்த்துவிட்டு உங்களுக்குள் ஒரு கேள்வி வரும் என்று நம்புகிறேன். படம் அருமையாக வந்த கமல்ஹாசன் சாருக்கு நான் என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
அடுத்ததாக படத்தை சிறப்பாக செய்து கொடுத்த இசையமைப்பாளர் அனிருத்துக்கு நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். படத்தின் பாடல்களை கேட்டு இருப்பீர்கள். அனிருத் என்னுடைய எதிர்பார்ப்புகளை மிஞ்சிவிட்டார், 100% திருப்தி அடையும்வரை டியூன் போட்டார். முதலில் ஒரு டியூனை போட்டுவிட்டு என்னிடம் எப்படி இருக்கிறது என்று கேட்பார்.
அதன்பிறகு, நான் 80 % ஓகே என்று கூறுவேன். விடவே மாட்டார் 100 % வரும் வரை எனக்காக டியூன் போட்டு கொடுத்தார். அவருக்கும் நான் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” எனவும் இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடத்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…
சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
ஹரியானா : பஹல்காமில் நடந்த தாக்குதலில் திருமணம் முடிந்து ஆறு நாட்களுக்குப் பிறகு தனது கணவர் பிரிந்த போதிலும், தாக்குதல்…
ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பெளலிங் செய்ய முடிவு…