சினிமா

BMW X7 : ரஜினிகாந்த் பரிசாக வாங்கிய காரில் இத்தனை அம்சங்களா? விலையை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!

Published by
பால முருகன்

ஜெயிலர் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், நடிகர் ரஜினிகாந்திற்கு படத்தின் தயாரிப்பாளரான கலாநிதி மாறன் BMW X7  காரை பரிசாக வழங்கினார். அந்த காரில் என்னென்ன சிறப்பம்சம் உள்ளது என்பதை விவரமாக பார்க்கலாம்.

ஜெயிலர் வெற்றிக்கு கார் பரிசு 

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் பலத்த சாதனைகளை படைத்தது. ஜெயிலர் திரைப்படத்தின் வரலாற்று வெற்றியை கொண்டாடும் வகையில், நடிகர் ரஜினிகாந்தின் வீட்டிற்கு நேரில் BMW i7 மற்றும், BMW x7 என இரண்டு கார்களுடன் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் சென்றுள்ளார்.

சென்றுவிட்டு ரஜினியை வீட்டிற்கு வெளியே அழைத்து வந்து இரண்டு கார்களில் எது வேணுமோ அதனை தேர்வு செய்யுங்கள் என்று கூறிவிட்டார். அதற்கு உடனே ரஜினிகாந்த் 1.24 கோடி மதிப்பிலான BMW X7 காரை  ரஜினிகாந்த் தேர்வு செய்தார்.

BMW X7 காரின் விலை 

ரஜினிகாந்த் தேர்வு செய்து பரிசாக பெற்றுக்கொண்ட BMW X7  காரின் விலை இந்தியாவில்  1.24 கோடி ரூபாய் . அதைப்போல BMW i7  காரின் விலை 1.95. இதில் ரஜினிகாந்த் தேர்வு செய்துள்ள  BMW X7 ஆனது 1 டீசல் எஞ்சின் மற்றும் 1 பெட்ரோல் இன்ஜின்களை வழங்குகிறது. டீசல் இன்ஜின் 2993 சிசி, பெட்ரோல் இன்ஜின் 2998 சிசியை கொண்டுள்ளது.

BMW X7 6 பேர் இருக்கை 

BMW X7  காரில் 6 பேர் செல்வது போல சொகுசான இருக்கைகள் உள்ளது. எனவே, இந்த காரில் 2 பெரியவர்கள் சென்று 6 சிறுவர்கள் கூட தாராளமாக செல்லலாம். பெரியவர்கள் சென்றால் 6 பேர் ஓட்டுனருடன் சேர்ந்து செல்லலாம். இந்த கார் 1 லிட்டருக்கு 11.29 முதல் 14.31  மைலேஜ் கொடுக்கும் எனவும் கூறப்படுகிறது.

புதிய அம்சம்

இந்த காரில் BMW X7  இன் டாஷ்போர்டில் வளைந்த கண்ணாடி டிஸ்ப்ளே கிடைக்கிறது. சுற்றுப்புற விளக்குகள் 14 வண்ணங்களில் இருக்கிறது. அதைப்போல, இந்த காருக்குள் அமர்ந்திருந்தால் இருக்கைகளில் சாய்ந்திருப்பது, மசாஜ் செய்வது போல ஒரு உணர்வை கொடுக்குமாம். இதைப்போல இந்த கார் பல வசதிகளைக் கொண்டுள்ளது.

மினி தியேட்டர் தான்

BMW X7  கார் இது 16-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் ஒலி அமைப்பையும் பெறுகிறது. எனவே காருக்குள் அமர்ந்து கொண்டு பாடல்கள் அல்லது படம் பார்த்தால் கூட நமக்கு ஒரு சின்ன திரையரங்கில் இருப்பது போல உணர்வை கொடுக்கும். மற்றபடி, காரின் உட்புறம் பெரிய அளவில் இருப்பதால் தேவையான பல பொருட்களை நாம் இந்த காருக்குள் வைத்து கொண்டு செல்லலாம்.

இரண்டு இன்ஜின்களும் BMW இன் ட்வின்-டர்போ தொழில்நுட்பம் மற்றும் 4 டிரைவிங் மோடுகளுடன் 8-ஸ்பீடு ஸ்டெப்ட்ரானிக் கியர்களை இந்த கார் கொண்டுள்ளது. மேலும், இந்த X7 கார் இந்தியாவில் ஜனவரி மாதம்  அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

3 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

3 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

3 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

5 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

6 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

6 hours ago