இது என்ன…! தலைவருக்கு கம்மியா இருக்கு? அலேக்காக தூக்கிய நெல்சன் – அனிருத்!

ஜெயிலர் பட வெற்றியை தொடர்ந்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தனது அன்பை பரிசு மழையாக பொழிந்து வருகிறார். ரஜினி, நெல்சனை தொடர்ந்து தற்போது, அனிருத்துக்கும் காரை பரிசாக வழங்கியுள்ளார், இது தொடர்பான வீடியோவை சன்பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
முதலில் ஜெயிலர் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், ரஜினிகாந்துக்கு லாபத்தில் ஒரு பங்கை வழங்கி பிஎம்டபிள்யூ (BMW x7) காரை பரிசளித்தார். இதனை தொடர்ந்து, இயக்குனர் நெல்சன் திலீப்குமாருக்கு காசோலை மற்றும் போர்ஷே (Porsche) காரும் வழங்கப்பட்டது.
தற்பொழுது, பிஎம்டபிள்யூ (BMW) மற்றும் போர்ஷே (Porsche) காரில் ஒன்றை தேர்வு செய்யும்படி அனிருத்திற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதில், இசையமைப்பாளர் இரண்டு கார்களையும் பார்த்துவிட்டு போர்ஷேவைத் தேர்ந்தெடுத்தார், பின்னர் அந்த காரை அவருக்குப் பரிசாக வழங்கப்பட்டது.
அந்த 2 கார்களின் விலை மற்றும் சிறப்பம்சம் குறித்து பார்க்கலாம்:
ரஜினிக்கு BMW i7 மற்றும், BMW x7 என இரண்டு கார்கள் கொடுக்கப்பட்ட நிலையில், அவர் BMW x7 காரை தேர்ந்தெடுத்தார். மேலும், நெல்சனுக்கும் அனிருத்துக்கும் கொடுக்கப்பட்ட போர்ஷே காரின் மாடல் முதலில் என்னெவென்று குறிப்பிடமால் இருந்தது. தற்பொழுது, அது Porsche Macan ரக கார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ‘Macan S’ வேரியண்ட் கார் தான் நெல்சன் மற்றும் அனிருத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதில், ரஜினி தேர்வு செய்த BMW காரின் விலையை விட, நெல்சனும் அனிருத்தும் எடுத்துக்கொண்ட Porsche கார் 20 லட்சம் அதிகமாக உள்ளது என்று தெரிகிறது. ஆம்… BMW 7 காரின் விலை ரூ.1.24 கோடி, Porsche Macan S காரின் விலை ரூ. 1.43 கோடி.
BMW x7
BMW X7 காரின் விலை இந்தியாவில் 1.24 கோடி ரூபாய் ஆகும். டீசல் மற்றும் பெட்ரோல் இன்ஜின்களை கொண்டுள்ளது. 6 பேர் செல்லும் சொகுசான இருக்கைகள் உள்ளது. இந்த கார் லிட்டருக்கு 11.29 என மைலேஜ் கொடுக்கும்.
Porsche Macan S
‘Porsche Macan S’ காரின் விலை ரூ. 1.44 கோடி என கூறப்படுகிறது. 5 பேர் செல்லும் சொகுசான இருக்கைகள் உள்ளது. 4,8 வினாடிக்கு 0 லிருந்து 100கீமி வேகத்தில் செல்லலாம். அதிகபட்சமாக 259 கி.மீ வேகத்தில் செல்லும். இந்த கார் லிட்டருக்கு 11.7 என மைலேஜ் கொடுக்கும்.
ஜெயிலர்:
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் எழுதி இயக்கிய ‘ஜெயிலர்’ திரைப்படம் இந்தாண்டு அதிக வசூல் செய்த தமிழ்ப் படங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. தற்போதயை தகவலின்படி, இப்படம் உலகம் முழுவதும் ரூ.600 கோடி வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் மோகன்லால், ஷிவா ராஜ்குமார் மற்றும் ஜாக்கி ஷெராப் ஆகியோர் சிறப்பு வேடங்களில் நடிக்க, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு மற்றும் பலர் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.