#BREAKING : பெரும் அதிர்ச்சி…நகைச்சுவை நடிகர் மனோபாலா காலமானார்.!!

RIP MANO BALA

நடிகரும், திரைப்பட இயக்குனருமான மனோபாலா உடல்நலக்குறைவால் காலமானார்.

நடிகரும், இயக்குனருமான மனோபாலா உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 69. கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக 15 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் மனோபாலா, இன்று சென்னையில் உள்ள தனது வீட்டில் காலமானார்.

இவருடைய திடீர் மறைவு திரைதுறையில் பெரும் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ள நிலையில், ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். ஆகாய கங்கை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான மனோபாலா ஊர்க்காவலன், பிள்ளை நிலா, சிறைப்பறவை உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார்.

படங்களை இயக்கியது மட்டுமின்றி, சமுத்திரம், ரமணா, பிதாமகன், காக்கி சட்டை, மாப்பிள்ளை, அலெக்ஸ் பாண்டியன், கலகலப்பு உள்ளிட்ட படங்களில்  காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதுவரை 40 திரைப்படம், 16 தொலைக்காட்சி தொடர், 3 தொலைக்காட்சி திரைப்படங்களை மனோபாலா இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்