புஸ்ஸி ஆனந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு…மருத்துவமனை வந்த நடிகர் விஜய்!

விஜய் மக்கள் இயக்கம் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் மற்றும் லியோ வெற்றிவிழா போன்ற நிகழ்வுகளை கவனித்து வந்த நிலையில், உடல்சோர்வு உள்ளிட்ட காரணங்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், இப்பொது நலமுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்த தகவல் கேட்ட உடன் மருத்துவமனைக்கு விரைந்த நடிகர் விஜய், அவரின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். முன்னதாக, லியோ படத்தின் வெற்றி விழா நவம்பர் 1ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகவும் பிரமாண்டமாக நடந்தது.
சினிமாவை சினிமாவாக மட்டும் பாருங்கள் – நடிகர் விஜய் வேண்டுகோள்
இந்த விழாவில் விஜய், த்ரிஷா,லோகேஷ் கனகராஜ், மிஸ்கின், சாண்டி, மடோனா, அர்ஜுன், கௌதமேனன், ரத்னகுமார், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அயலான் படத்தை தொடர்ந்து மீண்டும் ரவிக்குமாருடன் இணையும் சிவகார்த்திகேயன்!
லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி இருந்த இந்த படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். கடந்த அக்.19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான லியோ படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. லியோ திரைப்படம் வெளியான 14 நாட்களில் உலகம் முழுவதும் 588 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025