98வது ஆஸ்கர் விருது பட்டியல் வெளியீடு! எந்த படம், யார் வென்றார்கள்?

சிறந்த படத்திற்கான ஆஸ்கார் One Battle After Another படத்திற்கு அளிக்கப்பட்டது.

Oscars 98

கலிபோர்னியா :லாஸ் ஏஞ்சல்ஸ் டால்பி தியேட்டரில் நடைபெற்ற 98வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா (2026) ஞாயிற்றுக்கிழமை இரவு (இந்திய நேரப்படி திங்கள்கிழமை அதிகாலை) நடைபெற்றது. இந்தியாவில் அதிகாலை 3:30 மணிக்கு ரெட் கார்பெட் ப்ரீ-ஷோவும், 4:30 மணிக்கு மெயின் விழாவும் JioHotstar-இல் நேரலையில் ஒளிபரப்பானது. கானன் ஓ’பிரையன் இவ்விழாவை தொகுத்து வழங்கினார்.

விழாவின் முதல் விருதாக சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கார் Weapons படத்தில் நடித்த ஆமி மாடிகனுக்கு (Amy Madigan) வழங்கப்பட்டது. இதுவரை ஆஸ்கார் வரலாற்றில் முதல் முறையாக கேஸ்டிங் (Casting) பிரிவுக்கு விருது அறிமுகப்படுத்தப்பட்டது. One Battle After Another படத்திற்கு Cassandra Kulukundis இந்த விருதை பெற்றார்.சிறந்த அனிமேஷன் படத்திற்கான ஆஸ்கார் KPop Demon Hunters-க்கும், சிறந்த அனிமேஷன் ஷார்ட் பிலிமிற்கு The Girl Who Cried Pearls-க்கும் வழங்கப்பட்டது.

சிறந்த படத்திற்கான ஆஸ்கார் One Battle After Another படத்திற்கு அளிக்கப்பட்டது. இயக்குநர் பால் தாமஸ் ஆண்டர்சன் இந்த படத்தின் மூலம் சிறந்த இயக்குநர் விருதையும் வென்றார்.சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் Sinners படத்தில் நடித்த மைக்கேல் பி. ஜோர்டனுக்கும், சிறந்த நடிகைக்கான விருது Hamnet படத்தில் நடித்த ஜெஸ்ஸி பக்லிக்கும் (Jessie Buckley) வழங்கப்பட்டது. சிறந்த துணை நடிகருக்கான விருது Sean Penn-க்கு (One Battle After Another) கிடைத்தது.

மற்ற முக்கிய விருதுகள்:சிறந்த ஆவண குறும்படம் – All the Empty Rooms, சிறந்த விசுவல் எஃபெக்ட்ஸ் – Avatar: Fire and Ash, சிறந்த பாடல் – Golden (KPop Demon Hunters), சிறந்த பின்னணி இசை – Ludwig Göransson (Sinners), சிறந்த ஒளிப்பதிவு – Autumn Durald Arkapaw (Sinners), சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் – Frankenstein, சிறந்த ஆடை வடிவமைப்பு – Kate Hawley (Frankenstein)

சிறந்த படத்தொகுப்பு – Andy Jurgensen (One Battle After Another), சிறந்த ஒலி – F1.நாமினேஷன்கள் ஜனவரி 22, 2025 அன்று அறிவிக்கப்பட்டன. Sinners படம் 16 நாமினேஷன்களுடன் முன்னிலை வகித்தது. இந்த 98வது ஆஸ்கார் விழா திரையுலக ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. One Battle After Another மற்றும் Sinners படங்கள் முக்கிய விருதுகளை கைப்பற்றியதால் இவ்விழா வரலாற்று சிறப்பு பெற்றுள்ளது.