வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரை தாக்கினேனா? மா.கா.பா ஆனந்த் ஆவேசம்!

ஏதாவது ஒரு கன்டென்ட் அவருக்கு தேவை.. அதுவும் ஃபிரியா கிடைக்கணும் அதுக்காக இப்படியெல்லாம் பேசிட்டு இருக்காரு என மா.கா.பா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Hero Image

சென்னை: குக் வித் கோமாளி சீசன் 7-இல் படமாக்கப்பட்டுக் கொண்டிருந்த எபிசோடில், வாட்டர் மெலன் திவாகரை கானா வினோத், புகழ் மற்றும் மாகாபா ஆனந்த் உள்ளிட்டோர் தாக்கியதாக வாட்டர் மெலன் திவாகர் வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனையடுத்து, சென்னை பூந்தமல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மாகாபா ஆனந்த், சம்பவம் குறித்து விளக்கமளித்தார்.

அவர் கூறியதாவது “என்ன நடந்தது என்றால், அவர் (வாட்டர் மெலன் திவாகர்) தனது குடும்பத்துடன் இருக்கிறார். வெளியில் எங்கோ போகிறார். மனைவியுடன் இருக்கிறார். அந்த சமயத்தில் அவருடன் இருக்கும் நபர்களைப் பற்றியோ அல்லது அவருடன் வந்த பெண்களைப் பற்றியோ யாராவது தவறாகவோ, கேலி கிண்டலாகவோ அல்லது ஆபாசமாகவோ பேசினால் நீங்கள் என்ன செய்வீர்கள்? கேள்வி கேட்பீர்கள். ‘ஏன்டா அது மாதிரி பண்ற?’ என்று கேட்பீர்கள். அது மாதிரி அவர் சில விஷயங்களைச் செய்தார். அதற்கு channel என்ன செய்தது என்றால், ‘தம்பி நீ வெளியில் போயிடு’ என்று சொல்லிவிட்டது.

ஏற்கனவே அவர் ஒரு ஷோவுக்கு வந்தார். அங்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹீரோயின் மற்றும் மெயின் கேரக்டர்களிடம் ரொம்ப ஒரு மாதிரியாக இலிவா வந்து முகசு சொல்லும் மாதிரி ஏதோ ஒன்று பேசினார். அப்போது அவர்கள் போகும்போது complaint பண்ணியதற்குப் பிறகு, ‘நீங்க நல்லா பாருங்க, அந்த ஷோவில் இரண்டு வாரம் அதாவது நாலு எபிசோடுகள் வந்துட்டு பாருங்கள்’ என்று சொன்னார்கள். அவருக்கு ஞாபகம் இருக்கிறது – நாலே நாலு பேர்தான். 28 ஆர்ட்டிஸ்ட்கள், ஜட்ஜ்கள் சேர்த்து 30 பேர் இருந்தாலும் அவருக்கு அந்த நான்கு பேர்தான் ஞாபகம்.

அப்பவே இருந்து அவர் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார் என்றால், ‘நான் தான் அவரை வேலையை விட்டு தூக்கினேன்’ என்று நினைத்துக்கொண்டிருக்கிறார். நேற்று நடந்ததில் என்ன என்று பார்த்தால், இவர்கள் இந்த மாதிரியான விஷயம் செய்கிறார்கள். சிலர் கேள்வி கேட்டார்கள். அதனால் புகழுக்கு பொறாமை. வினோத் ஏற்கனவே எனக்கு மேல் பொறாமை கொண்டிருந்தார். இது அப்படின்னு ஒரு allegation அவர் வைக்கிறார்.இது அவருக்கு ஆறு மாதத்துக்கு ஒரு முறை அல்லது மூன்று மாதத்துக்கு ஒரு முறை ஏதாவது ஒரு content செய்ய வேண்டும். அது அவருக்கு free-ஆ கிடைக்க வேண்டும். இப்போது தமிழ் புத்தாண்டு அன்று Police Station வாசலில் நான் நிக்க வேண்டும் என்று எனக்கு இருக்கிறது.

ஏனென்றால் இது மாதிரி கர்மம் பிடித்தவர்கள் எல்லாம் வந்து நம்மை encourage செய்கிறோம் என்று நினைக்கிறேன்.நான் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் நிற்பேன். மது அருந்திவிட்டு எப்படி full day நிற்பார்கள்? அப்படி இல்லவே இல்லை. நீங்கள் கேட்கும் போதே எனக்குக் கோபம் வருகிறது. Channel தான் ‘வெளியில் போங்கள்’ என்று சொன்னது. ஏனென்றால் இவர் தகாத வார்த்தைகள் பேசிக்கொண்டிருந்தார்.

பெண்களைப் பற்றி தவறாகப் பேசினார். ஒரு கணவன் முன்னால் அவரது மனைவியைப் பற்றி ஆபாசமாகப் பேசினார். இவ்வளவு நாள் நீ அவளுடன் இருந்தாய், ஒரு நாள் என்னுடன் இரு என்று சொன்னார். இது comedy-யா? நீங்கள் சொல்லுங்கள்.இதனால்தான் பிரச்சினை ஏற்பட்டது. பெண்களிடம் ஆபாசமாகப் பேசுவது, சமுதாய ரீதியாக பிரித்துப் பேசுவது – எப்போதும் அவரது மனதில் ஒரு கேவலமான எண்ணம் இருக்கிறது.அவர்கள் விசாரிக்கப் போகிறார்கள். மற்றவர்கள் எல்லாம் விசாரிக்கப் போகிறார்கள்.

இப்போது நான் வேண்டுமானால் ஒரு வீடியோ காட்டுகிறேன். நிஷா பேசிய வீடியோ என்னிடம் இருக்கிறது. காட்டட்டுமா?”மாகாபா ஆனந்தின் இந்த விளக்கம், சம்பவத்தின் பின்னணியை வெளிப்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக channel-உம், பிற கோமாளிகளும் விசாரணைக்கு உள்ளாகியுள்ளனர். இந்தச் சம்பவம் “குக் வித் கோமாளி” சீசன் 7-ஐ சுற்றி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.