ஐயோ என்னங்க இதெல்லாம்? நடிகையின் குளியல் நீரில் சோப்…விலை எவ்வளவு தெரியுமா?

தன்னுடைய குளியல் நீரை சோப் ஆக மாற்றிய நடிகை சிட்னி ஸ்வீனி விற்பனை செய்ய தயாராகி இருக்கிறார்.

sydney sweeney soap price

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நடிகை சிட்னி ஸ்வீனி, தனது குளியல் நீரைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சோப்புகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி தலைப்பு செய்திகளில் இடம்பிடித்துள்ளார். இந்த தனித்துவமான தயாரிப்பு, டாக்டர் ஸ்குவாட்ச் என்ற இயற்கை சோப் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.  அவருடைய குளியல் நீரில் உருவான அந்த சோப்க்கு “சிட்னியின் குளியல் நீர் பேரின்பம்” (Sydney’s Bathwater Bliss) என பெயரும் வைக்கப்பட்டுள்ளது.

விலை எவ்வளவு?

இந்த சோப்பின் விலை ஒரு பட்டையின் மதிப்பு 8 அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 685 க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. இன்னும் இந்த சோப் விற்பனைக்கு வரவில்லை வரும் ஜூன் 6, 2025 முதல் டாக்டர் ஸ்குவாட்சின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த சோப் விற்பனைக்கு கிடைக்கும். மொத்தமாக 5,000 சோப் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளன,

இதனால் இவை விரைவில் விற்றுத் தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், அந்த அளவுக்கு நடிகை சிட்னி ஸ்வீனிக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும், வரும் மே 29 முதல் ஜூன் 5 வரை நடைபெறும் புரோமோஷனல் லாட்டரியில் வெற்றிபெறும் 100 அதிர்ஷ்டசாலிகளுக்கு இந்த சோப் இலவசமாக வழங்கப்படுகிறது.

சிட்னி ஸ்வீனி இந்த தயாரிப்பு குறித்து பேசுகையில், “எனது ரசிகர்கள் என் குளியல் நீரைப் பற்றி தொடர்ந்து கேட்டு வந்தனர், அதனைப் பயன்படுத்தி ஒரு சோப்பை உருவாக்குவது வித்தியாசமான மற்றும் சுவாரஸ்யமான யோசனையாக இருந்தது,” என்று கூறினார்.

நடிகையின் இந்த முயற்சி சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை பெற்றுள்ளது. ஏனென்றால், பலரும் “இதை வாங்கும் அளவுக்கு யாராவது ஆர்வமாக இருப்பார்களா?” என்றும் மேலும் சிலர் புதிதாக ட்ரெண்ட் ஆகுவதற்கும் மார்கெட்டிங்கிற்காகவும் இப்படி செய்துகொண்டு இருக்கிறார்கள் எனவும் விமர்சித்து பேசியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்