என் மகனை இழந்துட்டேன் ..நடிகை த்ரிஷா கண்ணீர்! என்ன நடந்தது?
தான் வளர்த்து வந்த செல்ல நாய்க்குட்டியான ஜோரோ இன்று உயிரிழந்ததாக நடிகை த்ரிஷா உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.

சென்னை : சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் பலரும் ஆசையாக நாய் மற்றும் பூனைகள் போன்ற விலங்குகளை வளர்த்து வருவதை ஒரு வழக்கமாக வைத்துள்ளார்கள். எனவே, திடீரென அதுகளுக்கு இத்வதஹு உடல்நல குறைவு ஏற்பட்டுவிட்டது என்றால் கூட உடனடியாக சோகத்தில் ஆழ்ந்துவிடுவார்கள். அப்படி தான் நடிகை த்ரிஷா 12 வருடங்களாக ஆசை ஆசையாக வளர்த்து வந்த Zorro என்ற நாய் குட்டி உயிரிழந்த காரணத்தால் மிகுந்த சோகத்தில் உள்ளார்.
தன்னுடைய நாய்க்குட்டி உயிரிழந்த சோகமான தகவலை தனது ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்வதற்காக சமூக வலைத்தளங்களில் பதிவு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். அதில் ” எனது மகன் சோரோ (Zorro) இன்று கிறிஸ்துமஸ் அதிகாலையில் காலமானார். என்னை நன்கு அறிந்தவர்களுக்கு இனி என் வாழ்க்கையின் அர்த்தம் பூஜ்ஜியமே என்று தெரியும்.
என்னுடைய மகன் உயிரிழந்ததால் நானும் எனது குடும்பத்தினரும் பெரும் மனமுடைந்து இருக்கிறோம். நான் எனது வேலையிலிருந்து சில காலம் ஓய்வு எடுக்க உள்ளேன்” என கூறியுள்ளார். அத்துடன் நடிகை த்ரிஷா தன்னுடைய வளர்ப்பு நாய் சோரோவின் இறுதிச்சடங்கு புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். த்ரிஷா வேதனையுடன் இருப்பதை பார்த்த ரசிகர்கள் கவலைப்படாதீங்க என அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.
த்ரிஷா தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி, ‘தக் லைஃப்’, சூர்யா 45, தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ‘விஸ்வம்பரா’ என பல பெரிய படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். இந்த சூழலில், த்ரிஷாவுக்கு மன வேதனை அளிக்கும் வகையில் இப்படியான சம்பவம் நடந்துள்ளதால் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு இந்த படங்களின் படப்பிடிப்புகளும் அவர் கலந்துகொள்ள வாய்ப்பு இல்லை எனவும் கூறப்படுகிறது.
— Trish (@trishtrashers) December 25, 2024
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025