"Miss u sir..உங்களது மரணம் எங்களுக்கு பேரிழப்பு;வார்த்தைகளால் விவரிக்க முடியில்லை"-இயக்குநர் அட்லி இரங்கல்..!

"Miss u sir .. Your death is a disaster for us; words cannot describe it" -Director Atlee mourns.

“Miss u sir..உங்களது மரணம் எங்களுக்கு பேரிழப்பு;வார்த்தைகளால் விவரிக்க முடியில்லை”.

நகைச்சுவை நடிகர் விவேக்,நேற்று காலை திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்படிருந்த நிலையில்,இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார்.

நடிகர் விவேக்கின் மறைவிற்கு பல அரசியல் தலைவர்களும்,திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தும் மற்றும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.

இந்த நிலையில்,இயக்குநர் அட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.அதில் “Miss u sir..உங்களது மரணம் எங்களுக்கு பேரிழப்பு;வார்த்தைகளால் விவரிக்க முடியில்லை-RIP” எனப் பதிவிட்டுள்ளார்.