தர்பார் பட கேமரா மேன் சந்தோஷ் சிவன் அளித்த திடீர் தகவல்!

தமிழ் சினிமா ரசிகர்களிடையே சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்பட்டவர் ரஜினிகாந்த் ஆவார்.இவர் தற்போது தர்பார் படத்தில் நடித்து முடித்துவிட்டு தலைவர் 168 படத்தின் பூஜையை துவங்கியுள்ளார்.
இந்நிலையில் தர்பார் படம் பொங்கலுக்கு வெளிவரும் என்ற தகவல் வெளியாகியது.இதனால் இப்படத்தின் ட்ரைலர் நாளை சூப்பர் ஸ்டார் பிறந்த நாள் என்பதால் வெளியாகும் என்று பலரும் எதிர்பார்த்துள்ளனர்.
ஆனால் நேற்று தர்பார் படத்தின் கேமரா மேன் சந்தோஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தல் படத்தின் ட்ரைலர் பற்றி பதிவு செய்தது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.ஆனால் இன்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ட்ரைலர் தேதி இன்னும் பதிவு செய்யப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இவரின் இந்த தகவல் சூப்பர் ஸ்டார் ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை அளித்துள்ளது.
To all the dear Rajini Sir Fans -There is no date finalised for Trailer yet.
— SantoshSivanASC. ISC (@santoshsivan) December 11, 2019