Divya Spandana [File Image]
நடிகை திவ்யா ஸ்பந்தனா மாரடைப்பால் காலமானார் என்ற வதந்தி செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவி வரவி வந்த நிலையில், அந்த செய்தி உண்மையில்லை என்றும், அந்த வதந்தி முற்றிலும் பொய்யானது என நிரூபித்துள்ளார்.
ரம்யா (திவ்யா ஸ்பந்தனா) தமிழ் சினிமாவில், வாரணம் ஆயிரம், பொல்லாதவன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார். நடிகையாக இருந்து பின்னர் அரசியல்வாதியாக மாறிய திவ்யா ஸ்பந்தனா தமிழ் மற்றும் கர்நாடக திரைத்துறையில் இளம் நடிகையாக வலம் வந்தவர்.
இதன் பின் இவர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், லோக்சபாவின் முன்னாள் உறுப்பினரான திவ்யா ஸ்பந்தனா மாரடைப்பால் காலமானார் என்ற வதந்தி செய்தி பரவ தொடங்கியது. இருப்பினும், ஒரு பத்திரிகையாளர், நடிகையிடம் பேசி அவர் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்தினார்.
மற்றொரு, பெண் பத்திரிகையாளர், ஜெனீவாவில் திவ்யாவுடன் விருந்து சாப்பிடும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். தற்போத, அந்த பெண் பத்திரிகையாளரின் போஸ்ட்டுக்கு பதிலளித்த நடிகை திவ்யா ஸ்பந்தனா “நம்ம ஊரில் விரைவில் சந்திக்கிறேன்” என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதன் மூலம், தன்னை பற்றி பொய்யான செய்திகளை பரப்பிவர்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…