Categories: சினிமா

காதலர்களே கொண்டாட ரெடியா? ரீ-ரிலீஸ் ஆகிறது எங்கேயும் எப்போதும்!

Published by
பால முருகன்

இன்றைய காலகட்டத்தில் படங்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி ஹிட் அடைந்த படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. அப்படியான ரீ-ரிலீஸ் செய்யப்படும் படங்களும் பெரிய அளவில் விமர்சனங்களை பெற்று ஹிட் ஆகியும் வருகிறது. அந்த வகையில், 3, முத்து, ஆளவந்தான் ஆகிய படங்கள் எல்லாம் கடந்த ஆண்டு ரீ-ரிலீஸ் ஆகி பலத்த வரவேற்பை பெற்று இருந்தது.

இந்த படங்களை தொடர்ந்து காதலர்கள் கொண்டாடி தீர்க்க ‘எங்கேயும் எப்போதும்’ திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. எம்.சரவணன் இயக்கத்தில் அஞ்சலி, ஜெய், ஷர்வானந்த், அனன்யா ஆகியோர்  நடிப்பில் செப்டம்பர் 16. 2011 அன்று திரையரங்குகளில்  வெளியான இந்த படம் பலத்த வரவேற்பை பெற்று இருந்தது.

நாளை “கேப்டன் மில்லர்” ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி.! குட்டி ஸ்டோரி சொல்லும் தனுஷ்.!

படத்தில் வரும் காமெடி காட்சிகள் காதல் காட்சிகள் எல்லாம் அந்த சமயமே பெரிய அளவில் பேசப்பட்டது. அதுமட்டுமின்றி படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் எல்லாம் கண்கலங்க வைக்கும் வகையில் இருக்கும். அந்த சமயம் பெரிய வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் மீண்டும் திரையங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது.

அதன்படி, வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு காதலர்கள் ஒன்றாக இணைந்து பார்ப்பதற்காக படத்தை ரீ-ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம். மீண்டும் படம் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளதால் படத்தை பார்க்க பலரும் ஆவலுடன் காத்துள்ளனர். மேலும், இந்த திரைப்படத்தை போல கார்த்தி நடிப்பில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற பையா திரைப்படமும் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி  அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

ஏர் இந்தியா நிறுவனத்தில் 51 பாதுகாப்பு குறைபாடுகள் – DGCA தணிக்கையில் அம்பலம்.!

டெல்லி : இந்தியாவின் விமானப் பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகள் குறித்து சமீபத்திய DGCA தணிக்கைகள் பல முக்கியமான பிரச்சினைகளை வெளிப்படுத்தியுள்ளன.…

2 hours ago

மோடி எங்கே? அமித்ஷா பதிலுரை.., எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு.!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இந்த கூட்டத்தொடரின் போது இல்லாதது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…

3 hours ago

கே.டி.ராகவனுக்கு மீண்டும் பொறுப்பு – நயினார் நாகேந்திரன் அறிவிப்பு.!

சென்னை : தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நடிகை குஷ்பு உள்பட 14 பேர்…

3 hours ago

பண மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!

சென்னை : நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு (EOW)…

4 hours ago

ஆக.1ம் தேதி முதல் இந்தியாவுக்கு 25% வரி – அதிபர் டிரம்ப் அறிவிப்பு.!

அமெரிக்கா : அமெரிக்காவுடன் சுமுகமான வர்த்தக உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 1-ஆம் தேதி) முதல்…

4 hours ago

நாசா – இஸ்ரோ கூட்டு முயற்சி.., விண்ணில் சீறி பாய்ந்தது ‘நிசார்’ செயற்கைக்கோள்.!

ஆந்திரா : நாசா மற்றும் இஸ்ரோ கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட 'நிசார்' செயற்கைக்கோள் இன்று (ஜூலை 30, 2025) வெற்றிகரமாக…

5 hours ago