நாசா – இஸ்ரோ கூட்டு முயற்சி.., விண்ணில் சீறி பாய்ந்தது ‘நிசார்’ செயற்கைக்கோள்.!

இஸ்ரோ - நாசா இணைந்து உருவாக்கிய ''நிசார்'' செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

NASA - NISAR

ஆந்திரா : நாசா மற்றும் இஸ்ரோ கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட ‘நிசார்’ செயற்கைக்கோள் இன்று (ஜூலை 30, 2025) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் (Sriharikota) இருந்து GSLV-F16 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் மாலை 5:40 மணிக்கு (IST) ஏவப்பட்டது.

ரூ.12,000 கோடியில் புவி கண்காணிப்பிற்காக இந்த செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது புவியில் இருந்து 743 கி.மீ. தொலைவில் சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இதன்மூலம் பருவநிலை மாற்றங்கள், பேரிடர் மேலாண்மை உட்பட பல அம்சங்கள் குறித்த தகவலை பெறலாம்.

நிசார் செயற்கைக்கோள் முதல் முறையாக இரட்டை அலைவரிசை (L-band மற்றும் S-band) ரேடார் அமைப்பைப் பயன்படுத்தி பூமியின் மேற்பரப்பை 12 நாட்களுக்கு ஒருமுறை முழுமையாக வரைபடமாக்கும். இது புவி அறிவியல், பேரிடர் மேலாண்மை, விவசாயம், மற்றும் காலநிலை மாற்ற ஆய்வுகளுக்கு முக்கியமான தரவுகளை வழங்கும். இந்தப் பணி இந்தியா மற்றும் அமெரிக்காவின் விண்வெளி ஒத்துழைப்பில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்