SilambarasanTR and deepika padukone [Image source : file image ]
பத்து தல திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிம்பு அடுத்ததாக இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் தனது 48-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை பிரபல நடிகரான கமல்ஹாசன் தனது ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.
இப்படத்திற்கு தற்காலிகமாக ‘STR48’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்திற்காக சிம்பு நீளமான முடியுடன் இருக்கிறார். விரைவில் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. இதற்கிடையில், படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ள நடிகை குறித்த தகவல் கசிந்துள்ளது.
அதன்படி, இந்த திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக இந்தி நடிகை தீபிகா படுகோனே நடிக்கவுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகும் இந்த திரைப்படம் ஒரு இந்தியத் திட்டமாக இருப்பதால், தீபிகா படுகோனை கதாநாயகியாக நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் படம் சிம்புவின் நடிப்பில் மிகப்பெரிய படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த செய்தி உண்மையாக இருந்தால், தமிழில் தீபிகா படுகோனே நடிக்கும் இரண்டாவது படமாக ‘STR 48’ அமையும். இவர் ரஜினிகாந்துடன் நடித்த ‘கோச்சடையான்’ படத்தின் மூலம் கொல்லியூட்டில் அறிமுகமானார் என்பது குறிப்பிடதக்கது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…