பலருக்கு அவர் நம்மவர்! எனக்கு அவர் நல்லவர்! – கவிஞர் வைரமுத்து

கமல்ஹாசனின் 66-வது பிறந்தநாளையடுத்து கவிஞர் வைரமுத்து வாழ்த்து.

கமல்ஹாசனின் 66-வது பிறந்தநாளையடுத்து கவிஞர் வைரமுத்து வாழ்த்து.

பிரபல நடிகரும், அரசியல் கட்சி தலைவருமான கமலஹாசன் இன்று தனது 66-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து இவருக்கு வாழ்த்து தெரிவிக்க, அவரது ரசிகர்களும், தொண்டர்களும் காலையிலேயே அவரது வீட்டின் முன்பாக திரண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மேலும், பல பிரபலங்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘பிறந்தநாள் என்பது சில மெழுகுவர்த்திகளை அணைப்பதல்ல. சில தீபங்களை ஏற்றுவது. இருளைப் புறங்காண தீபங்கள் ஏற்ற தெரிந்தவர்  நண்பர் கமலஹாசன். தொலைபேசியில் அழைத்து வாழ்த்தினேன். பலருக்கு அவர் நம்மவர், எனக்கு அவர் நல்லவர். வாழ்க!’ என பதிவிட்டுள்ளார்.

unknown node