அரசியல் கதையில் கவுதம் கார்த்திக்.. ராஜூ முருகன் கூட்டணியில் சூப்பர் அப்டேட்.!
கௌதம் கார்த்திக் பிறந்தநாளையொட்டி அவர் நடிக்கவுள்ள 19ஆவது திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
சென்னை : ஜிப்ஸி, ஜப்பான் படங்களை இயக்கிய ராஜு முருகன் வசனம் எழுதும் படத்தில் கதாநாயகனாக நடிகர் கவுதம் கார்த்திக் நடிக்கிறார். இன்று கவுதம் கார்த்திக் தனது 35வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இதனை முன்னிட்டு, அவரது 19ஆவது திரைப்பட அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ள. ‘GK19’ என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை, அறிமுக இயக்குனர் தினா ராகவன் இயக்க உள்ளார்.
தினா ராகவன் வேற யாருமல்ல ராஜு முருகனின் உதவி இயக்குனர் தான். இந்த படத்தை இயக்குவதன் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாகிறார். கவுதம் கார்த்திக் கடைசியாக, பத்து தல படத்தில் நடித்திருந்தார்.
இந்தப்படம் தென்சென்னையில் வாழும் சாமானியனின் யதார்த்த வாழ்வியலோடு அரசியலை நகைச்சுவையாக கூறும் படமாக உருவாகிறது. தலைப்பு மற்றும் நடிகர்கள் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படம் ஜோக்கர் மற்றும் மண்டேலாவின் பாணியில் சென்னையை பின்னணியாகக் கொண்டு இருக்கும். படம் ஏப்ரல் அல்லது மே 2025 இல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.