பிக்பாஸ் வனிதாவிற்கு ஜோடியாக நடிக்கும் நடமாடும் 'கோல்ட்மேன்'.! வித்தியாசமான டைட்டிலுடன் பூஜை ஆரம்பம்.!

Big Boss Vanitha will next be paired with Hari Nadar, who is said to be Goldman, who will be seen in '2K Azhaganathu Kaadhal'.

பிக்பாஸ் வனிதா அடுத்ததாக ‘2K அழகானது காதல்’ என்ற படத்தில் நடமாடும் கோல்ட்மேன் என்று கூறப்படும் ஹரி நாடார் என்பவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

பிக்பாஸ் சீசன்-3ல் கலந்து கொண்டு ரசிகர்களின் அதிகப்படியான அன்பையும் ,அதே நேரத்தில் வெறுப்பையும் சம்பாதித்தவர் வனிதா விஜயகுமார் . அதன் பின் குக் வித் கோமாளியில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றார் .தற்போது சினிமாவில் நாயகியாக புது படமொன்றில் கமிட்டாகியுள்ளார்.

‘2K அழகானது காதல்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை முத்தமிழ் வர்மா இயக்குகிறார்.மேலும் இந்த படத்தில் வனிதாவிற்கு ஜோடியாக நடமாடும் கோல்ட்மேன் என்று கூறப்படும் ஹரி நாடார் என்பவர் நடிக்கிறார்.இது அவரது முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.நடிப்பது மட்டுமின்றி படத்தினை தயாரிக்கவும் செய்கிறார் ஹரி நாடார் .இன்று இந்த படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றுள்ளது .அதில் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.விரைவில் படத்தில் நடிக்கும் பிற நடிகர் நடிகைகள் குறித்த விவரங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

unknown node