மார்ச் 15 முதல் சென்னையில் 'அண்ணாத்த' படப்பிடிப்பு.!

The shooting of the upcoming film Annatha starring Rajini is coming on 15th March. It is said to start in Chennai.

ரஜினி நடிப்பில் உருவாகவுள்ள அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற மார்ச் மாதம் 15 ஆம் தேதி. சென்னையில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மீனா , குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்,சூரி , சதீஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. அங்கு படக்குழுவினர் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது. அதனுடன் ரஜினியின் உடல்நிலையும் பாதிக்கப்பட தற்போது சென்னையில் ஓய்வு எடுத்து வருகிறார்.

அதன் பிறகு படத்திற்கான படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில், கடந்த மாதம் 25 ஆம் தேதி இந்த அண்ணாத்த திரைப்படம் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்தது.

அதன் பின்னர் இந்த படத்திற்கான படப்பிடிப்பு, வருகின்ற மார்ச் மாதம் 15 ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளதாக கூறப்பட்டது.தற்போது அந்த திட்டத்தை படக்குழுவினர் மாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆம் மார்ச் 15ம் தேதி முதல் தொடங்கவுள்ள அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அங்கு 30 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் என்றும்,அதன் பின் மீதமுள்ள சில முக்கியமான காட்சிகளை வட மாநிலங்களில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.இதுவரை படமாக்கப்பட படத்தின் காட்சிகளுக்கான எடிட்டிங் பணிகள் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.