பாலிவுட்டில் அறிமுகமாகும் 'அசுரன்' பட நடிகை.! அதுவும் இந்த சாக்லேட் பாய் நடிகருக்கு ஜோடியாமே.?

Actress Manju Warrier is reportedly making her Bollywood debut opposite Madhavan.

நடிகை மஞ்சு வாரியர் பாலிவுட்டில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் மஞ்சு வாரியர் நடிப்பில் தி ப்ரீஸ்ட்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இவர் மாராக்கர் ,ஜாக் அண்ட் ஜில்,காயட்டம்,9 எம்.எம் உள்ளிட்ட பல படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.

இவர் தமிழில் கடந்தாண்டு வெளியான அசுரன் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி பலரின் பாராட்டுகளைப் பெற்றார்.இப்படியிருக்க மஞ்சு வாரியர் அடுத்ததாக பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளாராம் .ஆம் அறிமுக இயக்குநர் கல்பேஷ் இயக்கி வரும் ‘அமெரிகி பண்டிட்’ எனும் இந்தி படத்தில் மஞ்சு வாரியர் நாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதில் நடிகர் மாதவன் ஹீரோவாக நடித்து வருகிறார்.தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு போபாலில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.