காமெடி படத்தில் நடிக்கும் அதர்வா.! இயக்குனர் யார் தெரியுமா.?

It has been reported that actor Atharva is all set to star in the director's next film, maragatha nanayam.

மரகத நாணயம் பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடிகர் அதர்வா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் இளம் ஹீரோவாக வலம் வரும் நடிகர் அதர்வா கடைசியாக “100” எனும் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார் . தற்போது இவர் குருதி ஆட்டம், தள்ளி போகாதே,பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடித்து வருகிறார் .

இந்த நிலையில் இவர் அடுத்ததாக காமெடி படமொன்றில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆம் கடந்த 2017-ம் ஆண்டு மரகத நாணயம் எனும் படத்தினை இயக்கிய ஏஆர்கே சரவணன் இயக்கும் காமெடி படத்தில் நடிகர் அதர்வா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் இந்த படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.விரைவில் படத்தினை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.