கமலின் 'பாபநாசம்' படத்தின் செக்கன்ட் பார்ட் உருவாகிறதா.?

It has been reported that the second part of the hit film Papanasam starring Kamal is in the making.

கமல் நடிப்பில் உருவாகி வெற்றி பெற்ற பாபநாசம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் திரிஷ்யம் . அந்த திரைப்படம் தமிழில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக்காகி அங்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது .அதில் கமல்ஹாசன், கௌதமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மலையாளத்தில் திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகியுள்ளது . மோகன்லால்,மீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரிஷ்யம்-2 படமானது நாளை மறுநாள் ஓடிடியில் வெளியாக உள்ளது.இந்த நிலையில் தற்போது இந்த படத்தினையும் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆம் தமிழில் பாபநாசம்-2 என்ற பெயரில் உருவாகும் இந்த பாகத்திலும் கமல்ஹாசன் நடிக்க உள்ளதாகவும் ,அதே நேரத்தில் தெலுங்கில் வெங்கடேஷ் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.அதற்கான படப்பிடிப்பில் கமல் சட்டமன்றத் தேர்தலுக்கு பின் கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த தகவல் எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.