சரித்திர படத்தில் சமந்தாவிற்கு ஜோடியாகும் இளம் நடிகர்.!

It has been reported that Samantha will be starring in the upcoming historical film Shakuntalam starring young actor Dushyant.

சமந்தா அடுத்ததாக நடிக்கவுள்ள சரித்திர படமான ஷகுந்தலம் படத்தில் இளம் நடிகர் துஷ்யந்த் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா.தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் உருவாகும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார் சமந்தா . அதனுடன் ‘ஷகுந்தலம்’ எனும் புராண படத்திலும் சமந்தா நடிக்கவுள்ளார்.

மகாபாரதத்தில் உள்ள சாகுந்தலம் என்ற புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ‘ஷகுந்தலம்’ படத்தினை அனுஷாவின் ருத்ரமாதேவி படத்தினை இயக்கிய குணசேகர் இயக்குகிறார்.இதில் சகுந்தலை கேரக்டரில் நடிக்க முதலில் அனுஷ்காவிடம் தான் அணுகினாராம் . ஆனால் அவர் மறுக்கவே கடைசியாக சமந்தா அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

ஐதராபாத்தில் மார்ச் 20-ம் தேதி முதல் ஷகுந்தலம் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது சமந்தாவிற்கு ஜோடியாக நடிக்கும் நடிகர் குறித்த புது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.அதாவது சாகுந்தலா தேவிக்கும், துஷ்யந்தனுக்கும் இடையேயான காதலை கூறும் ஷகுந்தலம் படத்தில் துஷ்யந்தன் கேரக்டரில் இளம் நடிகர் துஷ்யந்த் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.