5 ஆண்டுகளுக்கு பின் பட இயக்க தயாராகும் 'சூது கவ்வும்' இயக்குனர்.! ஹீரோ இந்த பிரபல நடிகரா.?

It has been reported that Nalan Kumaraswamy, the director of Soodhu Kavvum, will next direct the film with actor Arya.

சூது கவ்வும் பட இயக்குனரான நலன் குமாரசாமி அடுத்ததாக நடிகர் ஆர்யாவை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் சூது கவ்வும் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் இயக்குனர் நலன் குமாரசாமி.அதன் பின் விஜய் சேதுபதியை வைத்து ‘காதலும் கடந்து போகும்’ எனும் படத்தினை இயக்கினார்.ஆனால் பெரிய அளவில் வெற்றியை பெறாத இந்த படத்தினை தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக எந்தவொரு படத்தினையும் இயக்கவில்லை.சமீபத்தில் குட்டி ஸ்டோரி எனும் வெப் தொடரில் விஜய் சேதுபதியை வைத்து ஒரு பகுதியை இயக்கியதும்,அது வரவேற்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது நலன் குமாரசாமி பேண்டஸி த்ரில்லர் கலந்த ஒரு படத்தினை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் நடிகர் ஆர்யா நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.