மீண்டும் முன்னணி ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்.!

Leading actor Ashok Selvan is rumored to be paired with Vanibhojan.

பிரபல முன்னணி நடிகரான அசோக் செல்வனுக்கு ஜோடியாக வாணிபோஜன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் அசோக் செல்வன் நடிப்பில் கடந்தாண்டு வெளியான ஓ மை கடவுளே படம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது .அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ரித்திகா,வாணிபோஜன் உள்ளிட்ட பலர் நடிக்க படம் சூப்பர் ஹிட்டடித்தது . தற்போது அசோக் செல்வனின் அடுத்த படத்தில் வாண்போஜன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அறிமுக இயக்குனரான வெங்கட் இயக்கத்தில் உருவாகும் படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக வாணிபோஜன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இயக்குனர் வெங்கட் முன்னதாக இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.விரைவில் படத்தினை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.