gv prakash helps [File Image]
நடிகரும், இசையமைப்பாளருமான G.V.பிரகாஷ், சிறுவன் ஒருவருக்கு பண உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடைசியாக அடியே படத்தில் நடித்த நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார், தற்போது அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ரெபல் என்ற படத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில், இப்படத்தின் டீசர் இந்த தேதியில் வெளியானது.
நடிப்பு, இசையமைப்பது என பிஸியாக இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில், சமூக பயனர் ஒருவர் சிறுவனின் மூளைக்கு அருகில் உள்ள கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற நிதியுதவி கோரி ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார. இதையடுத்து சம்பந்தப்பட்ட நபருக்கு ரூ.75,000 அனுப்பிய ஜி.வி.பிரகாஷ், என்னால் முடிந்த சிறிய உதவி என குறிப்பிட்டுள்ளார்.
சமூக பயனரான அமீர் என்பவர், தனது X தள பக்கத்தில், ஆன்லைன்ல பண உதவி கேக்குறதுக்கு பயமா இருக்கு. இருந்தாலும் கேக்குறேன், என் அக்கா பையனுக்கு (1 வயசு) சிறு மூளை பக்கத்துல கட்டி இருக்குன்னு கண்டறிய பட்டுள்ளது. கொஞ்சம் பயமா தான் இருக்கு. நேற்று இரவு ராம்நாட்டில் இருந்து மதுரை அப்போலோ மருத்துவமனைக்கு கூட்டிட்டு போனோம்.
இயக்குனர் அமீர் சொல்வது உண்மைதான்…அடித்து சொல்லும் நடிகர் சசிகுமார்.!
அவங்க என்னன்னா உடனே… ஆப்பரேஷன் பன்னனும்னு சொல்றாங்க. ஆப்பரேஷனுக்கு 3.5 முதல் 4 லட்சம் வரை ஆகும்னு சொல்றாங்க. எங்க குடும்பத்திலிருந்து 2 லட்சம் வரை ரெடி பண்ணிட்டேன். கொஞ்சம் டைம் கொடுத்தா கூட அங்க இங்கனு எப்படியாச்சும் ரெடி பன்னிருவேன். உடனே பன்ன சொல்றாங்க, உங்களால எதாச்சும் முடிஞ்சா பண்ணுங்க ஃப்ரெண்ட்ஸ் என்று பண உதவி கோரியர்ந்தார்.
இதனையடுத்து, பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்துவந்த நிலையில், ஒரு வயது குழந்தையின் சிறுமூளைக்கு அருகில் உள்ள கட்டியை அகற்ற மருத்துவ உதவி கேட்டவருக்கு தன்னுடன் பங்காக ஜி.வி.பிரகாஷ், 75,000 ரூபாய் அனுப்பி உதவி கரம் நீட்டியுள்ளார். இவ்வாறு ஜி.வி.பிரகாஷ் உதவி செய்ததை அறிந்த பலரும், சமூக வலைத்தளங்கில் ஜிவிக்கு தங்களது பாராட்டுகளை குவித்து வருகிறார்கள்.
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…