hari suriya [fileimage]
Suriya – Hari : சூர்யாவுடன் பிரச்சனை என்ற தகவலுக்கு இயக்குனர் ஹரி தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் சூர்யா கூட்டணியில் வெளியான படங்கள் எல்லாம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று இருக்கிறது. குறிப்பாக ஆறு, வேல், சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 உள்ளிட்ட படங்கள் எல்லாம் மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கிறது. இதனாலே இவர்களுடைய கூட்டணியில் உருவாகும் படங்களுக்கு தனி மவுசு உண்டு.
இந்த படங்களின் வெற்றியை தொடர்ந்து இவர்களுடைய கூட்டணி அருவா என்ற படத்தின் மூலம் மீண்டும் இணையவிருந்தது. பிறகு சில காரணங்களால் அந்த படம் அப்படியே நிறுத்தப்பட்டது. படம் நின்றதற்கான காரணம் எதுவுமே வெளியாகவும் இல்லை. இருந்தாலும் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா ஹரி கூட்டணி இந்த படத்தின் மூலம் இணைந்துள்ள காரணத்தால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
இருப்பினும் படம் அப்படியே நின்றது அவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அந்த படம் பாதியில் நின்ற காரணத்தால் சூர்யாவுக்கும் இயக்குனர் ஹரிக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு பிரச்சனை ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த தகவலுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஹரி விளக்கம் கொடுத்துள்ளார்.
இது குறித்து பேட்டியில் பேசிய இயக்குனர் ஹரி ” என்னிடம் எங்கு சென்றாலும் சிங்கம் 4 படத்தின் அப்டேட் பற்றி தான் பேசுகிறார்கள். எப்போதும் சிங்கம் 4 அப்டேட் எப்போது சார் எப்போது சார் என்று தான் கேட்கிறார்கள். நான் இதுவரை சிங்கம் 3 பாகங்களை எடுத்துள்ளேன். இது ஒரு ஹாட்ரிக் ஹிட் உரிமையாகும், எனவே அடுத்த பாகத்தை எடுக்கவேண்டும் என்றால் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும்.
சூர்யாவுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. எப்போதும் நங்கள் நண்பர்களாக தான் இருக்கிறோம். இப்போதைக்கு, சிங்கம்4 பற்றி என்னிடம் எந்த திட்டமும் இல்லை, அது எப்போது நடக்கும் என்பதை காலம்தான் தீர்மானிக்கும்” எனவும் இயக்குனர் ஹரி தெரிவித்துள்ளார். மேலும், இயக்குனர் ஹரி தற்போது விஷாலை வைத்து ரத்னம் என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…
சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…
சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…