Mumtaj actress [file image]
Mumtaj : அண்ணன் மட்டும் இல்லை என்றால் நான் தற்கொலை செய்து இருப்பேன் என நடிகை மும்தாஜ் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
தமிழ் , தெலுங்கு, மலையாள ஆகிய மொழிகளில் ஒரு காலத்தில் கலக்கு கலக்கு என்று கலக்கியவர் நடிகை மும்தாஜ். இவர் விஜய்யுடன் இணைந்து ஆடிய கட்டிபுடி கட்டிப்புடி டா பாடல் இன்னும் வரை பலருடைய பேவரைட்டாக இருக்கிறது என்று கூட சொல்லலாம். ஆனால் , நல்ல நடிப்பு திறமை இருந்தும் கூட இவருக்கு பட வாய்ப்புகளே வரவில்லை. கடைசியாக தமிழில் ராஜாதி ராஜா படத்தில் தான் நடித்து இருந்தார்.
அந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழில் மும்தாஜிற்கு பெரிய அளவில் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்கிடையில், பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் இருக்கும் நடிகை மும்தாஜ் தனது வாழ்வில் நடந்த கசப்பான சம்பவங்களை வேதனையுடன் மனம் திறந்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய மும்தாஜ் ” ஒரு முறை எனக்கு குறுக்கு மிகவும் அதிகமாக வலித்தது. அந்த வலியை என்னால் வார்த்தைகளால் கூறவே முடியவில்லை.
அந்த வலி ஏற்பட்ட போது என்னால் என்னுடைய முதுகை கூட அசைக்கக்கூட முடியாத அளவிற்கு வலி ஏற்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் அந்த வலியை தாங்க முடியாமல் அனுபவித்தேன்.. அதன்பிறகு. மருத்துவமனையில் ஆராய்ச்சி செய்து, ஆட்டோ இம்யூன் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டது எனக்கு தெரிய வந்தது. இந்த நோயினால் என்னுடைய உடலில் எங்கு எலும்பு மூட்டுகள் இருந்தாலும் பயங்கர வலி ஏற்பட்டது.
அந்த நேரங்களில் எல்லாம் என்னால் நிற்கவோ. உடலை அசைக்கவோ முடியாமல் நரகத்தில் இருந்தது போல உணர்ந்தேன். இதனால் ரொம்பவே மனா உளைச்சலுக்கும் ஆள் ஆனேன். ஒரு முறை இதனால் ரொம்பவே நொந்துபோய் இரண்டு மணி நேரம் அழுதுகொண்டே இருந்தேன். பிறகு இதில் இருந்து என்னுடைய அண்ணன் தான் என்னை வெளியே கொண்டு வந்தார். அவர் மட்டும் இல்லை என்றால் தற்கொலை செய்து இருப்பேன்” எனவும் மும்தாஜ் கூறியுள்ளார். முதுகு வலிக்கு மும்தாஜ் தற்கொலை செய்ய துணிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி : இந்திய கிரிக்கெட்டின் மிகப் பெரிய நட்சத்திரங்களான ரோஹித் ஷர்மாவும், விராட் கோலியும் 2025 மே மாதத்தில் டெஸ்ட்…
யூடியூப் உலகம் முழுக்க 200 கோடிக்கும் மேற்பட்ட மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு பிரம்மாண்ட மேடையாக இருந்து வருகிறது. இதில் பலர்…
சென்னை : நடிகை தன்யா ரவிச்சந்திரனுக்கும், ‘பென்ஸ்’ திரைப்பட ஒளிப்பதிவாளர் கௌதம் ஜார்ஜுக்கும் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடைபெற்றது. ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. இந்த…
டெல்லி : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, யேமனில் 2017-ம் ஆண்டு தலால் அப்தோ மஹ்தி என்பவரைக் கொலை…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூலை 16 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும்…