Sai Pallavi [Image source : file image ]
தனது காதல் கதையை பற்றி நடிகை சாய் பல்லவி சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.
நடிகை சாய் பல்லவி தனது மனதிற்கு தோன்றும் விஷயங்களை வெளிப்படையாக பேசுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய பள்ளி பருவ காதல் கதையை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய நடிகை சாய் பல்லவி” நான் 7-ஆம் வகுப்பு படிக்கும் போதே என்னுடைய வகுப்பில் படிக்கும் மாணவர் ஒருவரை விரும்ப ஆரம்பித்தேன்.
அந்த பையனை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவரிடம் என்னுடைய காதலை வெளிப்படுத்த விரும்பினேன். ஆனால், நேரடியாகச் சொல்ல பயந்து காதல் கடிதம் ஒன்றை எழுதினேன். ஆனால் அந்த கடிதத்தை என்னால் அவரிடம் கொடுக்கவே முடியவில்லை.
அந்த கடிதத்தை நான் என்னுடைய புத்தகத்தில் வைத்திருந்தேன். அதனை என்னுடைய அம்மா தற்செயலாக பார்த்து மிகவும் கோபம் அடைந்தார். பிறகு எனக்கு அடி, உதை கிடைத்தது. பிறகு என்னுடைய அம்மாவிடம் நான் எந்த தவறும் செய்யவில்லை என புரிய வைத்தேன். அது தான் என்னுடைய அம்மா என்னை அடித்த முதல் முறையும், கடைசி முறையும்”. என்று கூறினார். மேலும் பேசிய அவர் குழந்தைகளை நல்ல வழியில் நடத்தும் ஒவ்வொரு தாயும் குழந்தைகளுக்கு ஹீரோ தான்” எனவும் கூறியுள்ளார்.
மேலும், நடிகை சாய் பல்லவி தற்போது தமிழில் சிவகார்த்திகேயனின் 21-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…